Wednesday, May 22, 2013

நாடு பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதே தவிர வேறு இனமொன்றின் போராட்டத்திலிருந்தில்லை!

மக்களின் சமூக மற்றும் மத உரிமை முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திலிருந்தும் நாடு மீட்கப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களுக்கும் தான் சார்ந்த மதத்தை சுதந்திரமாக பின்பற்றக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மாத்தளை புரான போதி விகாரையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடு பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. வேறு இனமொன்றின் போராட்டத்திலிருந்து நாடு மீட்கப்படவில்லை. நாட்டில் அனைத்து இன மக்களுக்கும் தாம் சார்ந்த மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையும் சுதந்திரமும் காணப்படுகிறது. பௌத்தர்களுக்கும் தமது மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்ற சுதந்திரம் காணப்படுகிறது.

நாடு வளரீதியாக அபிவிருத்தியடையும் போது மனிதர்களின் மனங்களும் மேம்பட வேண்டும். சிறுவர்களுக்கு நேரான வழியை காட்ட வேண்டும். இதன் பொறுப்பு மதத்தலைவர்களுக்கு காணப்படுகிறது. நாடு அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும் விழுமியம்மிக்க சிறுவர் பரம்பரை உருவாக்கப்படாவிட்டால், அபிவிருத்தியின் பயன்களை அனுபவிக்க முடியாது. இதனால் ஒவ்வொருவரும் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.

பௌத்தர்களுக்கு ஏனைய மதங்களை அவமதிக்க முடியாது. பௌத்த தர்மத்தில் ஏனைய மதங்களை மதிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவர்களை ஆன்மீக அறிவுடையவர்களாக வளர்;ப்பது அனைத்து பெற்றோர்களதும் கடமையாகுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment