Friday, May 10, 2013

பாக்கிஸ்தான் - இலங்கை ஒப்பந்தம். வரிவிதிகளில் தளர்ச்சி.

இலங்கை பாகிஸ்தான் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு பாகிஸ்தான் வரிச்சலுகைகளை வழங்க முனவந்துள்ளதாக அமைச்சர் ரிசார்ட் பதுயுதீன் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் ஏற்றுமதியின் போது விதிக்கப்பட்டிருந்த வரியை முற்றாக நீக்க பாகிஸ்தான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஏற்றுமதியாளர்களை அறிவுறுத்தும் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த வரிச்சலுகை ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் பாகிஸ்தானின் இஸ்தான்புல் நகரில் இலங்கை பாகிஸ்தான் வணீக நடவடிக்கைகள் தொடர்பான செயலாளர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையை தொடர்ந்து இவ் இணக்கப்பாடு எட்டப்பட்டது. அத்துடன் நுளம்புவலை, பிளக், ஏற்றுமதியின் போது முற்றாக வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. தலையில் தேய்க்கும் மருந்து எண்ணெய், போத்தல், குளிரூட்டி போன்றவற்றிற்கு இறக்குமதியின் போது 50 சதவீத வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெற்றிலை, மட்;பாண்ட உற்பத்திகள் ஏற்றுமதியின் போது 20 சதவீத வரிச்சலுகையை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. வழங்கப்பட்டுள்ள இவ்வரிச்சலுகை தொடர்பாக அறிவுறுத்தும் சந்திப்பொன்று கைத்தொழில் வணீக அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன தலைமையில் இடம்பெற்றது.

No comments:

Post a Comment