Wednesday, May 1, 2013

தொழிலாளரை வதைத்து தொழிலாளர் தினமா? ஈ.பி.டி.பி கட்சி எம்.பி சந்திரகுமாரின் அட்டகாசம்!

மே தினம் எனப்படுவது தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உலக தொழிலாளர் நலனுக்காக பெற்றெடுத்த புனித நாள். இந்த நாளில் தொழிலாளர் நலனுக்காக உலக தலைவர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்வதும், தொழிலாளர்களை கௌரவிக்கப்படுவதும், தொழிலாளர் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு நன்னாளாகும்

இந்த நிலையில் ஈ.பி.டி.பி கட்சி எம்.பி சந்திரகுமார் நடத்திய மேதின ஊர்வலத்திற்கு முதல் நாள் அழைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட உழவு இயந்திர சங்க அங்கத்தவர்களை வைத்து அவர்களது உரிமையை மீறும் வகையில் பலவந்தமாக மேதின ஏற்பாடுகளை செய்துள்ளார். புலிப்பாணி அரசியலையே சந்திரகுமார் எம்.பியும் பின்பற்றுவது போல் தெரிவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திர உரிமையாளர்கள் இந்த மேதின கூட்டத்திற்கு ஏற்ற ஒழுங்குகளை தமது தொழிலாளர் சகிதம் செய்து தரும்படியும், அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில் அவர்களுக்கு மணல் அனுமதிப்பத்திரம் (பேமிற்) எவையும் வழங்கப்பட மாட்டாது எனவும் மிரட்டப்பட்டுள்ளனர். இது தொழிலாளர்களின் உரிமையினை மீறும் செயல் என அத்தொழிலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும், எல்.ரி.ரி.ஈ யின் காலத்தில் வாழ்ந்த பயந்த வாழ்க்கையையே தற்போதைய ஆட்சியாளர்களும் அம்மக்களுக்கு பரிசாக வழங்கியுள்ளனர் போல் கருதவேண்டியுள்ளது.

No comments:

Post a Comment