Thursday, May 16, 2013

பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுதவிகளில் 85% வடக்கின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட்டது...! - பஸில்

ஸ்ரீலங்கா அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடனுதவிகளில் 85% பயன்படுத்தப்பட்டது வடக்கின் அபிவிருத்திக்கே என்றும், அரசாங்கம் வடக்கை அபிவிருத்தி செய்து, பொதுமக்களை இன மத பேதமின்றி குடியமர்த்தி, அனைத்து இலங்கையருக்கும் சௌபாக்கியத்தை வழங்குகின்றது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷதெரிவித்திருக்கிறார்.

மாதவச்சி - தலைமன்னார் புகையிரதப் பாதையில் மாதவச்சியிலிருந்து மட்டக்களப்பு வரையிலான பாதையின் முதற்கட்டத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

'25 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் புகையிரதப் பாதையைத் திறந்துவைப்பதன் மூலம் அரசாங்கம் வரலாற்றுப் பதிவொன்றைப் பதிவுசெய்துகொள்கிறது. அதாவது, வடக்கு - தெற்கு மக்களிடையே ஒற்றுமையையும், பொருளாதாரத்தையும், சமுதாய மற்றும் கலாச்சார ஒருமைப்பாட்டையும் வளர்ப்பதற்கு அரசாங்கம் வழிவகை செய்துகொடுத்துள்ளது'என்றும் அமைச்சர் அங்கு தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com