Thursday, May 2, 2013

இந்தியாவின் லடாக் பகுதியில் 750 சதுர கி.மீட்டரை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா!

இந்தியாவின் லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோட்டினை தாண்டி சீன ராணுவத்தினர் ஊடுருவியதாக தகவல் வெளியானது. மேலும், இந்திய வான்வெளியில் சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் பறந்து பின்னர் திரும்பி சென்றது என்றும் தகவல் வெளிவந்தது. இதனை அவசரமாக சீனா மறுத்தது. எனினும் இந்தியாவினுள் 19 கி.மீ. தூரம் சீன படைகள் ஊடுருவின என கூறப்பட்டது. மேலும், சீன படைகள் முகாமிட்டுள்ள பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இன்று நடைபெற்ற கூட்டத்தில் சீனா நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சாலை அமைப்பு

இந்நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியான தகவலில், இந்தியாவிற்குள் முகாமிட்டுள்ளவர்கள் சீன சுதந்திர மக்கள் ராணுவ படை வீரர்கள் ஆவார்கள். இவர்கள் மொத்தம் 30 பேர் உள்ளனர். இவர்களுக்கு தேவையானவைகளை சீன அரசு வழங்கி வருகிறது. செயற்கைகோள் புகைப்படம் வழியே பார்க்கும்போது, அங்கு சாலை அமைக்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. மேலும், லடாக்கின் வடபகுதியில் சுமார் 750 சதுர கி.மீட்டர் பகுதி வரை தேப்சாங் பல்ஜ் என்ற இடத்தில் சீன படைகள் முகாமிட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த விவகாரம் தூதரக அளவில் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. அமெரிக்காவின் எடு பிடியாக ஆசியாவில் செயற்படும் இந்தியாவுக்கு சீனா தன் வழிமையை காட்டியுள்ளது, ஒருக்கா சீனாவிடம் மூக்குடை பட்டது போதாது போல.
    சீனா கச்சதீவில் இலங்கை கடல் படைக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.

    ReplyDelete