வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் நேற்றுப் பிற்பகல் 1.00 மணியளவில் ஆயுத முனையில் 70 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான ஏழு மில்லியன் ரூபா பணமே இவ்வாறு இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ஜா-எல பிரதேசத்திலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக அதன் பணிப்பாளர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றிலிருந்து 7 மில்லியன் ரூபா பணத்தை மீளப்பெற்றுக் கொண்டு தனது காரில் வந்துள்ளார்.
பணத்துடன் ஜா-எல பிரதேசத்திலுள்ள தொழிற்சாலைக்கு காரை செலுத்திச் சென்றுகொண்டிருந்த போது தொழிற்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் வானில் முகமூடிகள் அணிந்த நிலையில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் நால்வர், காரை நிறுத்தி ஆயுதமுனையில் மேற்படி தொழிற்சாலையின் பணிப்பாளரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பாக மேற்படி தொழிற்சாலையின் பணிப்பாளர் ஜா-எல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment