Sunday, May 5, 2013

ஒலியை விட 5 மடங்கு அதிக வேகத்தில் சீறிப்பாயும் அமெரிக்க விமானம்

போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “வேவ் ரைடர்” எனப்படும் இந்த நவீன விமான சோதனை வெள்ளோட்டம் கடந்த 1ம் தேதி பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் நடந்தது. இந்த சோதனையில் ஆறே நிமிடங்களில் 230 கடல் மைல்களை கடந்து இந்த விமானம் சாதனை படைத்துள்ளது.

நிரப்பப்பட்ட எரிபொருள் சுமார் 240 வினாடிகளில் (6 நிமிடங்களில்) தீர்ந்த பின்னர், திட்டமிட்டபடி அந்த விமானம் கடலில் விழுந்தது. ஓர் இடத்தில் இருந்து எதிர்முனையை ஒலி சென்றடையும் நேரத்தின் அளவைத்தான் ஒலியின் வேகம் என்று குறிப்பிடுகின்றனர். அவ்வகையில், ஒலியானது ஓர் வினாடிக்குள் உலர்காற்றுள்ள பிரதேசத்தில் தோராயமாக 343.2 மீட்டர் (ஆயிரத்து 126 அடி) தூரம் பயணிக்கும்.

இதன்படி, ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 236 கி.மீட்டர் தூரம் வரை ஒலி பயணிக்கும். ஒலியை விட 5 மடங்கு வேகமாக பயணிக்கும் அமெரிக்காவின் நவீன விமானம், மணிக்கு சுமார் 6 ஆயிரத்து 180 கி.மீட்டர் தூரம் வேகத்தில் பயணம் செய்ய வல்லது என்பது நிரூபணமாகி உள்ளது.

இந்த விமானத்தின் மூலம் சில மணி நேரத்திற்குள் உலகின் உள்ள எந்த மூலையில் உள்ள நாட்டின் மீதும் எளிதாக தாக்குதல் நடத்த முடியும். இந்த நோக்கத்திற்காகவே புதிய அதிவேக விமானத்தை அமெரிக்கா சுமார் 30 கோடி டாலர்கள் செலவில் மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment