Wednesday, May 15, 2013

ஒரு விநாடியில் ஒரு பாட்டை பதிவிறக்கும் 5ஜி அலைக்கற்றை!

ஒரு விநாடியிலேயே முழு திரைப்படத்தையும் பதிவிறக்கம் செய்யும் அளவுக்கு அதிவேகம் கொண்ட, ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சோதனையை சாம்சங் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங், இந்த புதியசேதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தற்போதுள்ள அலைக்கற்றைகளில் 4ஜிதான் அதிவேகமானதாக கருதப்படுகிறது. ஆனால், இதை விட பல நூறு மடங்கு வேகம் கொண்ட 5ஜி தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய செயல்திட்டத்தின்படி 2 கி.மீ. தூர இடைவெளிக்குள் அமைந்த கம்ப்யூட்டர்களுக்குள் ஒரு ஜிகாபைட் பைல் ஒரு விநாடியில் பரிமாறறம் செய்யப்பட்டது எனக்குறிப்பிட்டார்.

இந்த புதிய தொழில்நுட்பம் வர்த்தக ரீதியில் 2020ம் ஆண்டுக்கு முன்னதாக பொதுமக்களுக்கு கிடைத்துவிடும். இதன் மூலமாக 3டி படங்கள், நேரடி அறுவை சிகிச்சை காட்சிகள், அல்ட்ரா ஹை டெபனேசன் பைல்கள் உள்ளிட்டவற்றை, அளவின்றி வெகு விரைவாக பெற முடியும் எனக்குறிப்பிட்டார்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக நேரடி காட்சிகளை, உடனுக்குடன் காண்பதும் சாத்தியமாகும். இதற்காக 64 டைட்டன் தொழில்நுட்பத்தில் அமைந்த 64 கோபுரங்கள் அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் விசேட அம்சம் என்னவென்றால் உலகிலேயே பூமிக்கு அடியில் வயர்களை பதித்து அதிகளவில் இன்டர்நெட் இணைப்பு கொடுத்துள்ள நாடுகளில் தென் கொரியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

No comments:

Post a Comment