Thursday, May 23, 2013

5 கோடியே 54 இலட்சத்திற்கு விலைபோன புறா!

பந்தயங்களில் கலந்துகொள்ளும் போலட் எனப் பெயரிடப்பட்டுள்ள மிக வேகமாகப் பறக்கும் புறா ஒன்றினை சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 5 கோடியே 54 லட்சத்திற்கு (400,000 அமெரிக்க டொலர்) வாங்கியுள்ளார்.

உலகின் வேகமான மனிதரான உசைன் போல்டினைப் போல பந்தயங்களில் மின்னல் வேகத்தில் பறக்கும் சக்தி வாயந்த புறாவிற்கு போல்ட எனப் பெயரிட்டுள்ளனர்.

தற்போது ஒரு வயதாகும் இப்புறாவே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு பறவை என்ற சாதனையை தன்னகப்படுத்தியுள்ளது. இதற்கு கடந்த ஆண்டில் ஜனவரியில் ஒரு பறவை 322,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையானதே சாதனையாக இருந்தது.

பெல்ஜியத்தில் இடம்பெற்ற பந்தயங்களில் கலந்துகொள்ளும் வேகமான பறவைகள் ஏலத்திலேயே இந்த போல்ட் எனும் புறாவை சீனாவைத் சேர்ந்த தொழிலதிபர் வாங்கியுள்ளார்.

இந்த ஏலத்தில் பெரும்பாலான பறவைகளை சீனா மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தவர்களே வாங்கியுள்ளனர். இந்தப் புறாவை வளர்த்த லியோ ஹெரிமன்ஸ் பெல்ஜியப் புறாக்களை வளர்ப்பதில் பிரபலமானவர்.

இதனால் குறித்த ஏலத்தின்போது ஹெரிமன்ஸ் தன்னிடம் இருந்த மொத்த பறவைகளையும் 50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஐம்பது லட்சம் டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கு விற்றுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com