நான் பிறப்பிலேயே தமிழ்பேசும் ஒருவர் என்பதால் "சனல் 4" தவறாக மொழிபெயர்ப்பு செய்துள்ளதை நன்கு புரிந்துகொள்ள முடிந்துள்ளது - ஹம்சா
அரச சார்பற்ற நிறுவனங்களின் அடிப்படையற்ற தகவல்களை இலக்காக வைத்து தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது பொய்யான தகவல் மற்றும் காணொளிகளுடன் கூடிய ஆவணப்படம் என ஐரோப்பிய சங்கத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹம்சா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான சக்திகளின் முயற்சியின் மூலம் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ஆவணப்படத்தில் சாட்சிகள் தமிழில் கூறியதை தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப, சனல் 4 தொலைக்காட்சி தவறாக மொழிபெயர்ப்பு செய்துள்ளது. பிறப்பிலேயே தமிழ்பேசும் ஒருவர் என்ற அடிப்படையில் தனக்கு இதை நன்கு புரிந்துகொள்ள முடிந்துள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே ஹம்சா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சி தயாரித்துள்ள யுத்தசூனிய வலயம் எனும் காணொளியின் மூலப்பிரதியை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை சனல் 4 தொலைக்காட்சி உண்மையை திரிபுபடுத்தி தனக்கேற்ற விதத்தில், சாட்சிகளின் கருத்துக்களை மாற்றியமைத்துள்ளமை பாரிய தவறான செயலெனவும் ஐரோப்பிய சங்கத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹம்சா குற்றம் சுமத்தியுள்ளார்.
1 comments :
Commercially based institution does matters to please their customers or viewers does in fact pleases them,but some or other the truth is hidden:let us see how the High commissioner for EU Mr.Hamza explains the hidden secrets of the channel 4 production.
Post a Comment