Sunday, May 5, 2013

ஸவுதியில் நிர்க்கதியாக உள்ள 4000 பேரையும் நாட்டுக்கு வரவழைக்க அரசு ஏற்பாடு!

ஸவுதி அரேபியாவில் அநாதரவாக இருக்கின்ற ஏறக்குறைய 4000 பணியாளர்களையும் நாட்டுக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு இரண்டு குழுக்களை வரவழைக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பணியாளர்களை நான்கு மாதங்களுக்குள் நாட்டுக்குக் கொண்டுவருவதற்காக அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ள முதலாவது குழுவில் 27 பேரும், இரண்டாவது குழுவில் 76 பேரும் அடங்குவர்.

ஜெய்தாவில் நிர்க்கதியாகியுள்ள அனைவரையும் வரவழைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன என்றும், ஸவுதி அரசாங்கத்தின் அனுமதிக்கேற்ப பணியாளர்கள் குழு இந்நாட்டுக்கு வரவழைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

(கேஎப்)

No comments:

Post a Comment