Wednesday, May 1, 2013

400 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட இறைவரி திணைக்களத்தின் ஆணையாளருக்கு 14 மாத கால கடூழிய சிறை தண்டனை!

400 கோடி ரூபா வட் வரி மோசடியில் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் ஏ.டபிள்யு. அம்பேபிட்டியவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர்நீதிமன்றம் ஏ.டபிள்யு. அம்பேபிட்டியவுக்கு 14 மாத கால கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது. அத்துடன் 5 லட்சம் ரூபா அபராதம் செலுத்த வேண்டுமென்றும், உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால், மேலும் ஈராண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படலாமென, மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில், வட் வரி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுததுக்கொள்ளப்பட்டது. வட் வரி மோசடியின் பிரதி வாதியான எஸ்.எம். அஷ்ரப் எனும் வர்த்தகருக்கு, ஈராண்டுகால கடூழிய சிறை தண்டனையும், 6 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறினால், அவரது சொத்துகளை பறிமுதல் செய்வதற்கும், கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது.

2002 மற்றும் 2004ம் ஆண்டு காலப்பகுதியில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் வட் வரி மோசடி தொடர்பான 13 பிரதிவாதிகள் இனங்காணப்பட்டுள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவருக்கு, இதற்கு முன்னர் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மற்றொரு சந்தேக நபர் தொடாபான விசாரணைகள், தொடாந்தும் இடம்பெறுகின்றன.

No comments:

Post a Comment