Friday, May 10, 2013

சனல் 4 விற்கு பணம் வேண்டுமாம். இலங்கை அரசின் குற்றச்சாட்டை நிருபணமாக்கும் மின்னஞ்சல்.

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் எனக்கூறி பல்வேறு வீடியோக்கள் மற்றம் புகைப்படங்களை வெளியிட்டது தொடர்ந்தும் வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுத்தும் இருந்தது. ஆனால் இவ்வாறான ஒவ்வொரு வீடியோக் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியானபோதும், சனல் 4 புலம்பெயர் புலிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றது என இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பைக் காட்டி வந்திருக்கின்றது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் மேற்படி குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் மின்னஞ்சல்கள் உலாவருகின்றது. அந்த மின்னஞ்சலில் சனல் 4 புலம்பெயர் புலிகளிடம் பணம் பெற்றுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களால் புலம் பெயர் தமிழ் மக்களுக்கு அனுப்பப்பட்டுவரும் அந்த மின்னஞ்சலில் „இலங்கையின் கொலைக்களம்; எனும் குறும்படத்தின் தயாரிப்பாளரால் வேண்டப்பட்டுள்ள நிதியை இதுவரை தமிழர்கள் எவரும் வழங்க முன்வரவில்லை என்பது கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , அவர் வேண்டியுள்ள ( 20000 ) இருபது ஆயிரம் பிரித்தானிய பவுண்டுக்களை இன்றே மக்கள் வழங்கவேண்டும் எனவும் அதனை கடனட்டை ஊடாக வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இது குறித்த வேண்டுதல் விடுக்கப்பட்டு ஒரு வாரங்களுக்கு மேலாகியும் மக்கள் அதனை கருத்திலெடுக்காமை பற்றி விசனம் தெரிவித்துள்ள அவர்கள் புலம்பெயர் தேசத்திலே நூற்றுக்கணக்கான புலம்பெயர் அமைப்புக்கள் இருந்தபோதும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சில ஆயிரங்களைத்தர முன்வந்தால் இவ்வாறு மக்களிடம் வேண்டவேண்டிய தேவை இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் 1 மில்லியன் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நிலையில் அந்த மக்களில் வெறும் 2 விழுக்காடு மக்கள் தலா 1 பவுண்டுகளை வழங்கினால் சனல் 4 இயக்குனர் வேண்டியுள்ள நிதியை கொடுத்திருக்க முடியும்' எனவும் அந்த மின்னஞ்சல் தெரிவிக்கின்றது.

எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் சனல் 4 வின் வெளியீடுகளில் எவ்வித நம்பிக்கையும் வைக்கவில்லை என்ற உண்மை ஒருவாரங்களாகியும் எவரும் நிதி உதவி செய்யவில்லை என்பதன் ஊடாக நிருபணமாகியுள்ளது.

சனல் 4 விற்காக 20000 பவுண்டுகள் வேண்டும் புலம்பெயர் புலிகள் அந்த 20000 பவுண்டுகளை வறுமைக்கோட்டின் கீழ் வடகிழக்கில் வாழும் 20 தமிழ் மாணவர்களுக்கு தலா ஆயிரம் பவுண்டுகள் வீதம் நிலையான வைப்பிலிட்டால் அதனூடாக சுமார் 2000 ரூபாவினை மாதாந்தும் வட்டியாக பெற்று அந்த பணத்தின் உதவியில் அவர்கள் கல்வியில் முன்னேறி வழமான சமூதாயம் ஒன்று உருவாக்க வழிவகுக்கும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்னஞ்சல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


1 comments :

Anonymous ,  May 11, 2013 at 11:12 AM  

Commercially based institutions purely depend on income.It is always
commercialize to use something to try to make a profit.Their productions for making or intend to make a profit.Their music has become
very commercialized.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com