Wednesday, May 15, 2013

ஐயோ எனக் கத்தியதால் 25,000 ரூபா அபராதம்!

கட்டாக்காலி நாயொன்று வீதியில் சென்ற உல்லாசப் பயணிகளின் ஜீப் வண்டியில் மோதி உயிரிழந்ததால் அதைப் பார்த்து ஐயோ என அலறி பரிதாபப்பட்ட பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபா கிடைத்த செய்தியொன்று கதிர்காமத்திலிருந்து கிடைத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுடனான ஜீப் வண்டியொன்று யால சரணலாயத்தில் மிருகங்களை கண்டுகளிக்கச் செல்லும் வழியில் பெற்றோல் நிலையத்துக்கருகில் நாயொன்றின் மீதேறியது. நாய் கத்தியபடி உயிர் விட்டதைப் பார்த்த வீதியில் சென்ற பெண்ணொருவர் ஐயோ என அலறி பரிதாபப்பட்டுள்ளார்.

இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அந்தப் பெண்ணை நாயின் உரிமையாளர் எனக் கருதி 25 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர்.

1 comments :

Anonymous ,  May 15, 2013 at 9:12 PM  

She is really great because she was so sorry for the innocent animal which lost its life.The careless toursit bus driver may be the cause of the death of the poor animal.This is very common in asian countries as the drivers don`t care the lives of the animals.The reward is not a great thing,but her sad feelings in regard to the dead dog is great. Hats off to the great female sympathizer.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com