Sunday, May 12, 2013

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முதல் நபர் பரிசை வெல்லும் 18 வயது மாணவன்!

அமெரிக்காவில் வாழும் இந்திய மாணவரான ரிதங்கர் தாஸ், தனது 18 வயதிலேயே உலகப்புகழ் பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இளங்கலை பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார். கொல்கத்தாவில் பிறந்தவரான ரிதங்கர் தாஸ் இந்த வருடத்திற்கான பல்கலைக்கழகத்தின் முதல் நபருக்கான பரிசை பெறவுள்ளார்.

பயோ என்ஜினியரிங் மற்றும் கெமிக்கல் பயாலஜி ஆகிய இரண்டு பாடங்களை முக்கிய பாடமாகவும், புதுமை படைப்புகளை துணைப்பாடமாகவும் எடுத்து மூன்று ஆண்டுகளில் அவர் வெற்றிகரமாக முடித்து முதலிடத்திற்கு வந்துள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மிக இளம் வயதில் முதலிடம் பிடித்துள்ள ரிதங்கர், தங்கப் பதங்கத்தையும், 2,500 டாலர்கள் ஸ்காலர்ஷிப்பும் பெறவுள்ளார்.புத்தகம் மற்றும் கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ள ரிதங்கர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தனது மாஸ்டர் டிகிரியை தொடங்கவுள்ளார். பிறகு மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.எச்டி. படிப்பை தொடருவார்.

ரிதங்கர் தாஸ் தனது 13 வயதிலேயே விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக சேர்ந்தார். பின்னர் எரிசக்தி தொடர்பான ஆராய்ச்சி திட்டங்களை பல்வேறு கல்வி நிறுவனங்களில் மேற்கொண்டார்.

அதனையடுத்து ஆராய்ச்சி முடிவுகளை பல்வேறு கண்டங்களுக்கு அனுப்பி வைத்த ரிதங்கரை அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி, அமெரிக்கன் பிஸிக்கல் சொசைட்டி, தேசிய அறிவியல் ஸ்தாபனம் ஆகியவை அங்கீகரித்துள்ளன.

மிக இளம் வயதிலேயே, ‘சீ யுவர் பியூச்சர்’ என்ற பொது நல அமைப்பை ஏற்படுத்தி ரிதங்கர் தாஸ் அதன் நிறுவனத் தலைவராக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

21-ம் நூற்றாண்டின் நட்பு நாடு இந்தியா -அமெரிக்கா-ஆசியப் பகுதிகளில் அதிக்கம் செலுத்துவதில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடையே போட்டி நிலவி வரும் நிலையில், இந்தியாவை தனது முக்கியமான நட்பு நாடாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

பாஸ்டன் பல்லைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கில் வெளியுறவுத்துறை துணை மந்திரி ராபர்ட் பிளேக் பேசியதாவது, 21-ம் நூற்றாண்டின் ஆசியாவில் குறிப்பிடத்தக்க ஒரு நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது என்று அதிபர் அறிவித்து உள்ளார்.

ஆசியாவில் சம்நிலை நிலவ வேண்டும் என்று இந்தியாவுடன் நாங்கள் அதிகம் பேசி வருகிறோம். ஆசியாவில் இந்தியாவை விட வேறு எந்த ஒரு நாடும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக விளங்கவில்லை.

பிராந்திய மற்றும் உலகப் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு, வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம், அறிவியல் குறித்த விசயத்தில் ஒரே நோக்கத்துடனும், ஆர்வத்துடனும், இந்தியாவும், அமெரிக்காவும் ஈடு இணையற்ற ஒத்துழைப்புகளுடன் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்புகளை பலப்படுத்தவும், விரிவுப்படுத்தவும் கடுமையாக உழைத்து வந்து இருக்கிறோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 4-ம் சுற்று பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் டெல்லியில் தொடங்கவுள்ளன என்று அவர் உரையாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment