Saturday, May 11, 2013

1,393 மில்லியன் ரூபா செலவில் இரசாயன பகுப்பாய்வுத் திணைக்கள கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு!

இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கென பத்தரமுல்லையில் 1,393 மில்லியன் ரூபா செலவில் ஆறு மாடிகளைக் கொண்ட நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தில் நவீன இரசாயனப் பகுப்பாய்வுக் கூடத்திற்கு அமெரிக்கா யு.எஸ். எய்ட் திட்டத்தின் மூலம் 272,500 அமெரிக்கன் டொலர் செலவில் தேவையான இயந்திர உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டதுடன் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் புதிய கட்டட பராமரிப்பு தொடர்பிலும் ஆலோசனைகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சின் செயலாளர் உட்பட நீதித்துறை உயர் அதிகாரிகள், சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment