Thursday, May 16, 2013

பலஸ்தீனர் சனத்தொகை 11.8 மில்லியனாக உயர்வு

உலகில் பலஸ்தீனர்களின் சனத்தொகை 11.8 மில்லியனாக உயர்ந்திருப்பதான தரவுகளை பலஸ்தீன மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பலஸ்தீனர் வெளியேற்றப்பட்ட 65 ஆவது நினைவுதினமான நக்பா அல்லது பேரழிவு தினம் கடந்த செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டதனையொட்டியே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 1948 ஆம் ஆண்டில் 1.37 மில்லியனாக இருந்த பலஸ்தீன சனத்தொகை 2012 ஆம் ஆண்டு முடிவின் போது மொத்த சனைத்தொகை 11.8 மில்லியனாக உயர்வடைந்துள்ளது.1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போது பலஸ்தீனர்கள் மீது முடக்கிவிடப்பட்ட வன்முறை மற்றும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை நினைவுகூரும் நக்பா தினம் உலகெங்கும் கடந்த இரு தினங்களும் அனுஷ்டிக்கப்பட்டது.

பலஸ்தீன தரவுகளின்படி வரலாற்று பலஸ்தீன நிலத்தில் (ஜோர்தான் ஆறு முதல் மத்தியதரைக் கடல்வரை) தற்போது 5.8 மில்லியன் பலஸ்தீனர்கள் வாழ்கின்றனர். இந்த எண்ணிக்கை 2020 ஆகும்போது 7.2 மில்லியனாக உயர்வடையும் என கணிக்கப்பட்டுள்ளது. 1948க்கு முன்னர் 1.4 மில்லியன் பலஸ்தீனர்களும் பலஸ்தீன நகர் மற்றும் கிராமங்களில் வாழ்த்து வந்தனர்.எனினும் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபின் 800,000 அதிகமானோர் தமது சொந்த மண்ணிலிருந்த அகதிகளாக வெளியேற்றப்பட்டு மேற்குக்கரை, காசா மற்றும் அரபு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இதிலே ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் இடம்பெயர்தபோதும் பெரும்பாலானவர்கள் இஸ்ரேல் ஆக்கிரமித்த 1948 எல்லை பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த தரவுகள் தொடர்பான பலஸ்தீன மத்திய நிலையத்தின் தகவலின்படி 1948 பேரழிவு தினத்தின் போது இஸ்ரேல் 774 நகரங்கள் மற்றும் கிராமங்களை ஆக்கிரமித்தது. இதில் 531 பலஸ்தீன நகரங்கள் மற்றும் கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. அதே போன்று இஸ்ரேல் படை 70க்கும் அதிகமான படுகொலைச் செயல்களில் ஈடுபட்டுள்ளது. அதில் 15,000 பலஸ்தீனர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

மறுபுறத்தில் பலஸ்தீன அகதிகள் தொடர்பான ஐ. நா. உதவி அலுவலகத்தின் தரவின்படி 2013 நடுப்பகுதிவரையில் 5.3 மில்லியன் பலஸ்தீன அகதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது உலகிலுள்ள மொத்த பலஸ்தீன சனத் தொகையில் 45.7 வீதமாகும். இவ்வாறு பதிவுசெய்யப்பட்டவர்கள் மேற்குக்கரை, காசா, ஜோர்தான் சிரியா மற்றும் லெபனானில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com