தமிழர்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு TNA முட்டுக்கட்டையாக இருக்கிறது என ஈ.பி.டி.பி இந்திய குழுவிடம் தெரிவிப்பு
தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு யதார்த்த பூர்வமான அரசியல் தீர்வை எட்டுவதற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து செயற்பட்டு வருகிறது எனவே இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் பங்கேற்கும் வகையில் இந்திய அரசு கூட்டமைப்பு மீது இழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் யாழ்.விஜயம் செய்த இந்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினரிடம் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தூதுக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று(09.04.2013) மாலை யாழ்.விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தூதுக்குழுவினரை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தூதுக்குழுவினரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்கள் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்தத்தி்ற்குப்பிந்திய வடக்கில் சமாதான நல்லெண்ண சூழலை உருவாக்குவதிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வடபகுதி அபிவிருத்திக்கும் தொடர்ந்தும் பங்களிப்பு செய்து வரும் இந்திய அரசுக்கு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தூதுக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக யாழ். அச்சுவேலி தொழில் பேட்டை அபிவிருத்திக்கும், யாழில் அமைக்கப்படவிருக்கும் கலாச்சார நிலையத்திற்கும் இந்திய அரசின் உதவி அளப்பெரியது என்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், மாணவர்களுக்கான உதவிகள், மற்றும் இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் ரெயில் பாதை புணரமைப்புத்திட்டம் உட்பாதை குணரமைப்பு திட்டங்களுக்கு இந்திய அரசு வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
மேலும் இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பில் எல்லை தாண்டி நுளைந்து தடைசெய்யப்பட்டசெய்யப்பட்ட றோலர் படகு மூலம் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் தீவகத்தில் உள்ள கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்படுவதாகவும் இதனைத்தடுத்து நிறுத்தவேண்டும் உன்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
மேலும் நெடுந்தீவு பிரதேச மக்களின் நலன்கருதி பயணிகள் இரண்டை தந்துதவும் படியும், இரு பஸ்வண்டிகள் மற்றும் குடிநீர் சுத்திகரிக்கும் தொகுதிகளை தந்துதவும் படியும் இந்திய குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன், நெடுந்தீவு பிரதே சபை தவிசாளர் தானியேல் றெக்சியன், யாழ் மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.
1 comments :
Why you are making yourself cheap by making petty requests? why not you make your request to your government,
which is wholeheartedly prepared to do that.
Post a Comment