Tuesday, April 30, 2013

முக்கொலையுடன் தொடர்புபட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் C.I.D யினரால் கைது!

2008 இல் கோமறங்கடவல பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் நேற்று இரகசிய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று திருகோணமலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் இரகசிய புலனாய்வு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கொமறங்கடவல பிரதேசத்தில் 05 வருடத்திற்கு முன்னர் இடம் பெற்ற முக்கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான கந்தளாய் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2008 ம் ஆண்டு கோமறங்கடவல பம்புறுவௌ பிரதேசத்தில் விறகு வெட்டுவதற்கு காட்டுக்கு சென்ற கணவன் மனைவி உட்பட இன்னுமொரு நபர் சந்தேகமான முறை யில் வெட்டிக் கொல்லப்பட்டனர். இக் கொலைச் சம்பவம் நடைபெற்ற போது ரத்னாயகே முதியன்சலாகே றுவன் சமிந்த ரத்னாயக்க (பொலிஸ் பரிசோதகர் கந்தளாய்), கேவவிதானகே சமிச்தலால், விதானகே சுசில் பிரேமலால் கருணாசே (அனுராதபுரம்) ஆகியோர் கோமறங்கடவல பகுதியில் பணி புரிந்த வர்கள் என தெரிய வருகிறது. கிராமவாசிகள் இவர்களே இக்கொலைகளைச் செய்திருக்க வேண்டுமென விடுத்த முறைப்பாட்டைக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இரகசிய புலனாய்வுப் பிரிவினர் தேடுவதை அறிந்த கந்தளாய் பொலிஸ் பரிசோதகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் தள வைத்தியசாலையில் மாரடைப்பு என அனுமதியானார். புலனாய்வு பிரிவினர் வைத்திய அதிகாரி யிடம் இவரது நோய் உண்மையா எனக் கேட்ட போது இவருக்கு இவ்வா றான நோய் இல்லை எனவும் தெரிவித்தார்.

நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து நீதிபதி எஸ். சதீஸ்தரன் குற்றவாளிகளை மே 13 ஆம் திகதி வரை திருகோணமலை விளக்கமறியலிலும் கந்தளாய் விளக்க மறியலிலும் வைக்கும்படி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment