Monday, April 22, 2013

வெகு சிறப்பாக நடந்தேறிய 'வடக்கே போகும் மெயில்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)

மெட்ரோ நிவ்ஸ் துணையாசிரியர் சூரன் ஏ. ரவிவர்மாவின் 'வடக்கே போகும் மெயில்' சிறுகதை தொகுதி வெளியீட்டு விழாவும், அமரர் ராஜ ஸ்ரீ காந்தன் நினைவு நிகழ்வும் சனிக்கிழமை நேற்று முன்தினம் (20)கொழும்பு, தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடந்தேறியது.

மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுகொண்டார்.

நூலின் அறிமுகம் மற்றும் வாழ்த்துரையை பேராசிரியர் மா.கருணாநிதி வழங்கினார். கருத்துரைகளை பிரபல தமிழ் - ஆங்கில பத்தி எழுத்தாளர் கே.எஸ்.சிவகுமாரன், ஏ.ஆர்.வி.வாமலோஜன் இருவரும் ஏற்புரையை சூரன்.ஏ.ரவிவர்மாவும் வழங்கினர். ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுரையை பிரபல எழுத்தாளர் மேமன் கவி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில், கலைஞர்கள் ஆர்வலர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)

No comments:

Post a Comment