Tuesday, April 30, 2013

மின்கட்டணத்தைத் தளர்த்துமாறு ஜனாதிபதி பணிப்பு!

வீட்டு மின்சாரப் பாவனைக்கான கட்டண அதிகரிப்பைத் தளர்த்துமாறு ஜனாதிபதியினால் ஆணையொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, மின்வலு சக்தி அமைச்சு திட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றதென அறியவந்துள்ளது.

மின்கட்டண உயர்வினால் வீட்டுமின் பாவனையாளர்கள்பெரிதும் பாதிக்கப்படுவதனால், கட்டணத்தைக் குறைத்து அவர்களுக்குச் சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ள பணிப்புரைக்கேற்பவே மின்கட்டணம் குறைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கேற்ப, மாதாந்தம் 150 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு நூற்றுக்கு 20 வீத கட்டணக் குறைவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சிலிருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் மின்சார சபை 3,500 கோடி ரூபாய்களை இலாபமாகப் பெறுவதற்கு உத்தேசித்திருந்தது. என்றாலும், கட்டணக் குறைப்பின் காரணமாக அந்த இலாபத் தொகை ரூபா 2,800 கோடியில் வீழ்ச்சியடைவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

(கேஎப்)

No comments:

Post a Comment