Thursday, April 18, 2013

யாழில் தங்கத்தின் பெறுமதி வீழ்ச்சி: அடைவு வைத்தவரகளை அழைக்கும் வங்கிகள்

சர்வதேச சந்தைகளில் தங்க பிஸ்கட்டுக்களின் வருகை குறைவடைந்துள்ளதால் குடாநாட்டில் கடந்த இரண்டு மாத காலப் பகுதிக்குள் மட்டும் பத்தாயிரம் ரூபாவுக்கு தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்க பிஸ்கட்டுக்களை கொள்வனவு செய்யும் விலைக்கு தங்கத்தின் கரட் பெறுமதிக்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படும் நிலையில், தங்க பிஸ்கட்டுக்கள் சர்வதேச சந்தைகளில் முடக்கப்பட்டுள்ளன. இதனால் இருக்கக்கூடிய தங்க பிஸ்கட்டுக்களை தரம்பிரித்து நகைகள் செய்யப்படுவதால் நகைகளின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு நகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் நகைப்பெறுமதிக்கு ஏற்ப குடாநாட்டு நகைக் கடைகளிலும் அதே விலையில் நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் இந்தியாவிலும் நகையின் பெறுமதிக்கேற்ப விலைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளன. ஆனால் குடாநாட்டைப் பொறுத்தவரையில் நகை விலைகளில் பெரிதாக மாற்றத்தைக் கொண்டுவரமுடியாது. எனினும் கடந்த 2 மாத காலப் பகுதிக்குள் நகைகள் விற்பனை செய்யப்பட்ட பெறுமதியில் இருந்து தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு மேலாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வீழ்ச்சி நகைக்கடை உரிமையாளர்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. ஏனெனில் தங்க பிஸ்கட்டுக்களைக் கொள்வனவு செய்யும் போது இருந்த விலையும் தற்போதைய விலையும் மாறுபாடு உடையதாகக் காணப்படுவதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நகைகளின் பெறுமதி இன்று சந்தையில் என்ன என்பதைக்கூற முடியாது என்றும் அது நாளுக்கு நாள் மாறுபடும் என்றும் நகைக் கடை உரிமையாளர் தெரிவித்தனர்.

இதே வேளை தங்கம் உச்ச கட்ட பெறுமதியில் வங்கிகளில் அடைவு வைத்த நகைகளுக்கு அதிகமான பணம் கொடுக்கப்பட்டது ஆனால் தங்கத்தின் விலை விரைவாக குறைவடைந்து வருவதால் வய்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகளின் பெறுமதி தற்போது குறைந்து விட்டது எனவே தற்போதைய தங்கத்தின் பெறுமதியை விட அதிகமான தொகைக்கு நகை அடைவு வைக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளருக்கும் மீதிப்பணத்தனை செலுத்துமாறு வங்கிகள் கடிதம் அனுப்பியுள்ளன.

இதனால் வங்கிகளில் அடைவு வைத்து காசை வாங்கி சுய தொழில் தேய்பவர்களும் அவசர தேவைக்காக வங்கியில் அடைவு வைத்தவர்களும் தற்போது வங்கிகள் மீதி பணத்தை கட்டச்சொல்லி வலியுறுத்துவதால் வங்கியில் அடைவு வைத்து வேலைகளை ஆரம்பித்தவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

No comments:

Post a Comment