கொரியாவில் போர் மூண்டால் இலங்கையரை மீட்டுவர தயார் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையில் முறுகல்நிலை வலுப்பெற்றால் தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களை உடனடியாக வெளியேற்ற தயாரான இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் குறித்த நிலைமைகளை தாம் தொர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், நிலைமைகள் மோசமாகும் பட்சத்தில் தென்கொரியாவில் பணியாற்றும் 23,000 பேரையும் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்துவரத் தயாராக விருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
1990, 91ஆம் ஆண்டு காலப் பகுதியில் குவைத் மீது ஈராக் படையெடுத்தபோது குவைத்தில் பணியாற்றிய 125,000 இலங்கையர்களைப் எவ்வாற பாதுகாப்பாக நாம் இலங்கைக்கு அளைத்து வந்த அனுபவத்தை கொண்டு தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களை அளைத்து வர தயாராக இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment