நானும் சிராணியும் நாட்டை விட்டு வெளியேறுவதன்றால் அரசாங்கம் இப்படிப் பயப்படுகிறதே! - பொன்சேக்கா
‘பொதுமக்கள் உண்மையை முழுமையாக அறிந்துகொள்ள முடியாதவண்ணம் கட்டுப்படுத்துகின்ற தன்மை பற்றி நாங்கள் எவ்வேளையும் பேசுவதற்குத் தயாராகவுள்ளோம். நேற்று முன்தினம் சிரஸ ஊடக நிலையத்திற்கு எதிராகத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சத்தியத்தை எடுத்துச் சொல்லவும், அரசாங்கத்தை விமர்சிக்கவும் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதோடு, அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்குச் செய்கின்ற அநீதிகள், உளரீதியான துன்புறுத்தல்கள் அனைத்தையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.
‘அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற பரிசுப் பொருட்கள், சலுகைகளைக் கண்டு சில ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் தலையாட்டு பொம்மைகளாக இருந்துவருகின்றனர். ஊடகவியலாளர்களுக்கு இலஞ்சம் கொடுத்து அவர்களை ஆட்டிப்படைக்க நினைக்கும் நிலையை நாங்கள் எதிர்க்கிறோம். சில ஊடக உரிமையாளர்களும் இந்த ஏமாற்றுக்களுக்குள் சிக்கி கைலாகாதவர்களாக மாறிவருகின்றனர். அவர்கள் ஒருபக்கம் சார்ந்துவிடுகிறார்கள்’ என்று குறிப்பிட்ட சரத் பொன்சேக்கா, மின்சாரக் கட்டணம் தொடர்பில் தான் எதிர்ப்பைத் தெரிவிக்க முக்கிய காரணம், அரசாங்கம் பொதுமக்கள் பற்றி எந்தவொரு சிந்தனையுமில்லாமல் ‘ஒரேயடியாக’ மின்சாரக் கட்டணைத் கூட்டியமைதான்.
அரசாங்கம் அனைத்தையும் மறைத்துக் கொள்ள முயற்சிசெய்கிறது. முன்னாள் பிரதம நீதியரசருக்கு வெளிநாடு செல்வதைத் தடை செய்த முக்கிய காரணம், சர்வதேசத்துடன் அவர் உறவினை ஏற்படுத்திக் கொள்வார் என்ற பயமேயாகும் என்று குறிப்பிட்ட பொன்சேக்கா, தொடர்ந்து குறிப்பிடுகையில், அரசாங்கம் தன்னையும் வெளிநாடு செல்ல முடியாதவண்ணம் தடித்திருப்பதற்கான காரணம் அரசாங்கத்தின் இரகசியங்கள் மற்றும் திட்டங்கள் பற்றி சர்வதேசம் அறிந்துகொள்ளும் என்ற பயமேயாகும்’ என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment