Thursday, April 4, 2013

மஹிந்தர் மீது அமெரிக்காவில் பதியப்பட்ட வழக்கு தள்ளுபடி..

லண்டனைச் சேர்ந்த காசிப்பிள்ளை உள்ளிட்ட விடுதலைப் புலிகள் ஆதரவாளர் 3 பேர் இலங்கை அதிபர் மகிந்தராஜபக்சே மீது அமெரிக்க மேல் முறையீட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கில் புலிகள் மீது போர் தொடுத்ததால் தமக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், அதற்கு ராஜபக்ஷ இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியிருந்தனர்.

இவ்வழக்கினை விசாரணை செய்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது. அதன் தீர்ப்பில் அதிபர் பதவி வகிக்கும் வரையில் ராஜபக்சே மீது வழக்கு தொடர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷே ஒரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வரையில் அவருக்கு ராஜதந்திர பாதுகாப்பு (னுipடழஅயவiஉ ஐஅஅரnவைல) உள்ளதால், இந்த வழக்கு மேற்கொண்டு தொடரப்பட முடியாது என ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றம் கூறியிருந்தது.

அதையடுத்து, அமெரிக்க சட்ட வல்லுனர் புருஸ் பெய்ன், 'இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்க ராஜாங்க அமைச்சு ராஜதந்திர பாதுகாப்பு வழங்கியது தவறானது என, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மூவர் சார்பில் மனு செய்திருந்தார்.

அந்த மனுவும் தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடர முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2 comments:


  1. தலைவா வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்.. அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் கருணா , கேபி யை ச் சேரும்...

    ReplyDelete
  2. மகிந்தரை ஜனாதிபதியாக்கியதே எமது மேதகு தலைவர் ஆவர். அன்று வன்னியில் தமிழ் மக்களை வாக்களிக்க விட்டிருந்தால் இப்போ மகிதரின் விலாசம் இல்லாதிருந்திருக்கும். வடக்கு கிழக்கும் பாதுகாப்பாக இருந்திருக்கும். எல்லாவற்றிக்கும் காரணம் சூரிய தேவனையும், அவனது ஆலோசகர்கள், புலன்பெயர் அறிவுக்கொழுந்துகள் மற்றும் புலன்பெயர் மந்தை கூட்டத்தையும் சாரும் என்பதை மீண்டும், மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறோம்.
    வன்னி மக்கள்

    ReplyDelete