இந்திய பாராளுமன்ற குழு மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட குழு யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் நிறை குறைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
யாழ். மகேந்திரபுரம் கிராமத்தில் இந்திய வீட்டு திட்டத்தின் கீழ் அமைத்து கொடுக்கப்பட்ட வீடுகளை இன்று (10.04.2013) காலை 9.00 மணிக்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் உள்ள நிறை, குறைகள் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்து கொண்டனர். தொடர்ந்து, அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் உட்கட்டுமான வேலைகளில் காணப்படும் முன்னேற்றத்தை பார்வையிட்டதுடன், குருநகரில் உள்ள இலங்கை இந்திய நட்புறவு வலைத்தொழிற்சாலை, யாழ் பொதுநூலகம், யாழ்.பல்கலைக்கழகம், பலாலி விமானத்தள புணரமைப்பு பணிகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து இந்த குழுவின் பாராளுமன்ற குழு மாலையில் கொழும்பு திரும்புவதுடன் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் நாளை(11.04.2013) வியாழக்கிழமை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்று அங்கு இந்திய அரசின் நீதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை பார்வையிட உள்ளனர்.
No comments:
Post a Comment