Wednesday, April 3, 2013

பிள்ளைகளின் கழுத்தில் தங்கமாலையா, சயனைட் குப்பியா போட்டு பார்க்க விருப்பம்!

தேர்தல் காலங்களில் மட்டும் உரிமைகள், தேசியம் தொடர்பாகப் பேசுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இலங்கையில் தொடர்ந்தும் குழப்பம் நிலவுவதையே விரும்புகின்றனர். இதற்கு இடம்கொடுக்காது நாம் அனைவரும் ஒன்றுபட்ட சக்தியாக உருவெடுக்க வேண்டும் என தேசிய வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

ஜேனிவா, இந்தியாவில் இருப்பவர்களும் ஜெனிவாவிற்குச் சென்று வருபவர்களும் எமது பிள்ளைகளின் கழுத்துகளில் சயனைட் குப்பிகள் இருப்பதையே விரும்புகிறார்கள். இதனால் எமது பிள்ளைகளின் எதிர்காலமே பாதிப்படைகிறது எனவே உண்மையாகவே தமிழ் மக்கள் மீது அன்பும் பாசமும் இருந்திருந்தால் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இந்த ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருக்க வேண்டும் என யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் அமைந்துள்ள ஐந்துமாடிக் கட்டிடத் தொகுதியை மீள் புனரமைக்கும் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

6 comments :

Anonymous ,  April 3, 2013 at 11:03 AM  

We defnitely need a new brainwash,We need to think about the past and the sufferings that we had,because we were even now behind the selfish and narrow minded politicians.

Anonymous ,  April 3, 2013 at 3:16 PM  

" உண்மையாகவே தமிழ் மக்கள் மீது அன்பும் பாசமும் இருந்திருந்தால் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இந்த ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருக்க வேண்டும்."

தமிழ் மக்களின் அழிவுகளுக்கு முதல் காரணம் புலிகள், அதன் பின்னர் இராணுவத்தினர் என்ற உண்மையை புலம்பெயர் மந்தைகள் விளங்கிக் கொள்ளவில்லை.
வன்னி மக்களை வெளியேற விடாது யுத்தத்தின் போது அவர்களை பலவந்தப்படுத்தி தங்களுக்கு பாதுகாப்பு அரணாக, தடுப்பு வேலியாக பாவித்து பலிகடாக்களாக்கியத்தை உலகம் அறிந்திருந்தும்,

மதிகெட்ட மந்தை கூட்டம் இன்னும் புரியாதது போல் புலிக்கொடியுடன் கூச்சலும், கூத்துக்களும் போடுவதில் எவ்வித தமிழ் மக்களுக்கு எவ்வித அனுதாமும், ஆதரவும் கிடைக்கப்போவதில்லை.

மாறாக எரிச்சலும், எதிர்ப்பையும் மட்டுமே சம்பாதிக்க நேரும்.

இவ்விடயத்தில் விமலின் கருத்து சரியானது.

karan ,  April 3, 2013 at 8:24 PM  

ஒரு அப்பழுக்கற்ற இனவாதியாக இருந்தாலும் சில சமயங்களில் விரவன்ச பேசுவது யாதார்த்தமாக இருக்கும். இவ்விடயத்திலும் நியாயமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.

இது தமிழர் காதுகளில் கேட்குமா என்பதுவே கேள்வி..

Anonymous ,  April 4, 2013 at 10:28 AM  

Be friendly with them,be sure they are ready to be friendly with you.They too Srilankans like us,rather than going behind the double minded and cunning neighboring strangers trust your own brothers and sisters.Do not bring the unknown strangers into our scene

Anonymous ,  April 4, 2013 at 12:02 PM  

Think on your own,think for humility
peace and prosperity.Do not go behind the political magicians,the art of doing political tricks that seem impossible in order to entertain
the tamil voters.As said be friendly with your southern brothers and sisters,hope you would achieve the best.

Anonymous ,  April 4, 2013 at 12:47 PM  

We need true singhalese politicians
to appear in our local Jaffna stages to clear the minds of the people and
make them to understand true and bogus politics,which may bring a good relations among both the communities.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com