Tuesday, April 30, 2013

பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு விசேட பணிப்புரை

மே தினத்தையொட்டி, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். நாளை இடம்பெறவுள்ள உலக தொழிலாளர் தினத்தையொட்டி மே தின ஊர்வலங்கள் மற்றும் மே தின கூட்டங்கள், கொழும்பில் நடைபெறவுள்ளன. கொழம்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் 13 மேதின ஊர்வலங்களும், 17 மே தின கூட்டங்களும் நடைபெறவுள்ளன.

இதில் கலந்து கொள்ளும் மக்களின் பாதுகாப்பு கருதி, விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு, பதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதற்கமைய, விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வெளி மாகாணங்களிலிருந்து மே தின ஊர்வலம் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ள வருகை தரும் மக்களுக்கு கொழும்பில் பிரவேசிப்பதற்கான விரிவான வேலைத்திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. பிரதான வீதிகளுடாக கொழும்பில் பிரவேசிக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கு, தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளுக்கமைய, செயற்படுமாறு, மேதின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களை பொலிஸார் கேட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின கூட்டம், பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவிருப்பதுடன், ஊர்வலம், தாமரை தடாகத்திற்கு அருகாமையிலிருந்து ஆரம்பமாகும். மருதானை வைட் மைதானத்திலிருந்து மக்கள் கட்சியின் ஊர்வலமும், தேச விமுக்தி மக்கள் கட்சியின் மே தின ஊர்வலம், மருதானை வீதியூடாக வந்து, பொரளை சந்தியில் ஐககிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் இணைவுள்ளது. மக்கள் ஐக்கிய முன்னணியின் மே தின ஊர்வலம் ஆயுர்வேத சநதி, சிறுவுர் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் காசல் வீதியூடாக வந்து, பொரளை டி.எஸ். சந்தியில் பிரதான ஊர்வலத்தில் இணையவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், சகல பங்காளி கட்சிகளின் பங்கேற்புடன் அதிவிமர்சையாக நடாத்த, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment