Saturday, April 6, 2013

இதைத்தான் நாங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்!

தமிழ்நாட்டின் திராவிட அரசியல் பாரம்பரியத்தில் மன்னிப் போம்! மறப்போம்! என்ற சுலோகம் வெகு பிரபலமானது. திராவிடத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்தபோதும், இந்திய தேசியத் தலைமைகளுடன் பகைமறந்து மாறிமாறிக் கூட்டணி அமைத்துக் கொள்ளும் போதும் திராவிடத் தலைவர்கள் தம் தொண்டர்களிடம் பெருந்தன்மையோடு சொல்லிக் கொள்ளும் வாக்கியம் அது.

அந்தப் பெருந்தன்மையான அரசியல் சுலோகத்தின் மூலமே, வட நாட்டானை விரட்டித் தனிநாடு அமைப்போம் என்ற தீவிர நிலைப்பாட்டை மென்மைப்படுத்தி, மாநில அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டனர். வடக்கு வாழ்கிறது; தெற்குத் தேய்கிறது என்ற உணர்ச்சிகரக் கோஷங்களைக் கைவிட்டு, நேருவின் மகளே வருக் நிலையான ஆட்சி தருக! என்று இணக்க அரசி யலைக் கையிலெடுத்து வென்றார்கள்.

ஆச்சரியம் என்னவென்றால், அந்தத் தலைவர்கள், ஈழத்தமி ழர்களின் பிரச்சினை என்று வருகிறபோது, மன்னிக்காதீர்கள்; மறக்காதீர்கள் என்று பகையுணர்ச்சியை வற்ற விடாமல் பாடம் நடத்துவதுதான்! எவ்வளவு காலத்துக்குத்தான் பகையிலும் ரோசத்திலும் வாழ்வை அழித்துக் கொண்டிருப்பது?
ஏன் எங்களால் யாரையும் மன்னிக்க முடியாமல் இருக்கிறது? உடனேயே, மன்னிக்கக்கூடிய கொடுமைகளையா அவர்கள் செய்தார்கள் என்று உணர்ச்சி பொங்கக் கொதித்தெழும்பு வதே எங்கள் வீர இயல்பாக இருக்கிறது. அறிவுபூர்வமாகச் சிந்தித்து மக்களைக் காக்கும் விதமாக யோசிக்க நாம் இப்போது கூட முன்வருவதாயில்லை.

ஒருவேளை, எங்களால் யாரிடமும் மன்னிப்புக் கேட்க முடியாமலிருப்பதுதான், அவர்களையும் எங்களால் மன்னிக்க முடியாதிருப்பதற்குக் காரணமாக இருக்கிறதோ என்னவோ! எங்கள் தரப்பில் செய்த மாபெரும் தவறுகள், அநீதிகள் பற்றி கடைக் கண்ணால் கூட திரும்பிப் பார்க்க நமக்கு விருப்பமில்லை. அப்படிப் பார்த்து நமது குற்றங்களும் இருப்பதாய்ச் சொல்கிறவர்களை, துரோகிகள் என்று இப்போதும் யாராவது போட்டுத் தள்ளிவிட மாட்டார்களா என்று சிலருக்கு வெளிப்படையான ஏக்கமும், பலருக்கு இரகசியமான ஆசையுமே இருக்கிறது!

நம் தரப்புப் பிழைகளை உணர்ந்து வெளிப்படுத்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டுவிடுவதன் மூலம்தான், அதுமாதிரியான தவறுகளுக்கு நாம் மீண்டும் போகாமலிருக்க முடியும். அதுமட்டு மல்ல, மற்றவர்களும் தங்கள் பிழைகளைப் பேசும் தளர்வான சூழ்நிலை உருவாகும். அதன்மூலம்தான் ரணங்கள் ஆறும்.

பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் சூழல் உருவானால்தான், பேச்சுவார்த்தை ஆயுதத்தால் நாம் பயனைப் பெற்றுக்கொள்ள முடியும். சிங்களத்தரப்பு, இந்தியத்தரப்பு, தமிழ்நாட் டுத்தரப்பு, ஈழத்தமிழர்கள் தரப்பு, புலம்பெயர்ந்தோர் தரப்பு என எல்லோருமே மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் சூழலை உரு வாக்குவது பற்றியே நம் முயற்சி, பேச்சு, எண்ணம் எல்லாம் அமைய வேண்டும்.

முதலில் நாமே மன்னிப்புகளைக் கேட்க ஆரம்பிப்பதில் என்ன குறைந்துவிடும்? 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்களைத் துரத்தினதுக்கு, பள்ளிவாசலினுள்ளும் மற்றும் இடங்களிலும் கொலைகளைச் செய்ததுக்கு, அநுராதபுரம், அரந்தலாவை, தலதா மாளிகை மற்றும் பொதுஇடங்களில் நடந்த கொலைகள், இந்தியத் தலைவர் கொலை, இன்னுமின்னும் தமிழ்த் தரப்பால் நடந்த கொலைகள் எல்லாவற்றுக்கும் பெரிய மன்னிப்பை, அவரவர்களிடம் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமே கேட்க வேண்டும்.

இவ்வாறு மன்னிப்பதன், மறப்பதன் மூலமே நமக்கும் எல் லோருக்குமான நல்வாழ்வுக்கு நாமனைவருமே திரும்ப முடியும். வெறுப்பால் மக்களைத் திரட்டுவதை விட இதற்குத் திரட்டுவது மிகக் கடினமான காரியம்தான். ஆனால், இதைத்தான் நாம் செய்தாக வேண்டும்.
இதைத்தான் நாம் செய்தாக வேண்டும்.

1 comments :

Anonymous ,  April 6, 2013 at 4:21 PM  

Christian religion says repent of your sins and forgive all others what they have done against you.God welcome the sinner who repents.The other religions also say the same thing in order to plough your mind with good virtues,like you plough the soil.But the opportunists and egoists dramatize everything and spoil the soup for their benefits.As we are illusioned
we are not in a position to understand the reality.Until we get rid of the illusion,reality would be invisible.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com