நீங்கள் இன்று உங்கள் முழுநேரத்தையும் கல்விக்காக செலவிடுவதையிட்டு மனமகிழ்சியடைகின்றேன். யாழில் கோத்தா.
கனடா வாழ் பெரும்பாண்மையினத்தைச் சேர்ந்த நலன்விரும்பிகள் மூவரின் நிதியுதவியுடன் தென்மராட்சி வலயப்பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. கொடிகாமம் 52 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மாணவர்கள் மத்தியில் பேசும்போது வடக்கின் மாணவர்களாகிய நீங்கள் இன்று உங்கள் முழு நேரத்தையும் கல்விக்காக செலவிடுவதையிட்டு மனமகிழ்சி அடைகின்றேன் என்றார்.
52 படைப்பிரிவன் ஏற்பாட்டில் தென்மாராட்சி வலயத்திற்குட்பட்ட 24 பாடசாலையைச் சேர்ந்த 1500 மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கப்ட்டதுடன் குறித்த வலயத்தில் கல்வி கற்பிக்கும் 100 ஆசிரியர்கள் மற்றும் 24 ஆதிபர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
அங்கு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் : ஒருமைப்பாட்டை நிலை நாட்டுவதற்கு மொழி, மதம், கலாசாரம் என்பன பிரதானமானதென்றார்.
நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, 52 படைப்பிரிவின் தளபதி பிரிக்கேடியர் அனுர சுதசிங்க, 51 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிக்கேடியர் சந்தன குணவர்த்தன மற்றும் படை உயரதிகாரிகள், வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் விக்னேஸ்வரன், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment