போப் இரண்டாம் ஜான் பால்லிற்கு பைபர் கிளாஸ்ஸில் மிக உயரமான சிலை
போலாந்து நாட்டில் பிறந்த போப் இரண்டாம் ஜான் பால் அவரது நினைவை போற்றும் வகையில் அந்நாட்டின் செஸ்டோசோவா நகரில் உள்ள ஜஸ்னா கோரா புனித தலத்தில் அவருக்கு பைபர் கிளாஸ் கண்ணாடியால் செய்யப்பட்ட 14 மீட்டர் உயரமுள்ள பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு மரணமடைந்த இரண்டாம் ஜான்பால் 27 ஆண்டுகளாக போப்பாக பதவி வகித்தவர். இவருடைய இந்த சிலை ஜஸ்னா கோரா புனித தலத்தில் உள்ள குன்றின் மீது நகரை நோக்கி பார்ப்பதுபோல் அமைத்துள்ளாதுடன் இந்த சிலையமைப்பதற்கான நிதியை லெசெக் லைசன் என்ற பக்தர் தனது மகனை மரணத்தில் இருந்து காப்பாற்றிய போப்புக்கு நன்றி காணிக்கை செலுத்தும் விதமாக வழங்கியுள்ளார்.
0 comments :
Post a Comment