Monday, April 29, 2013

தேர்தலில் நிற்க எனக்கு விருப்பம் என்றாலும் கூட்டணி ஒன்றும் சொல்லுதில்லையே? - விசனப்படுகிறார் தயா மாஸ்டர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வட மாகாணத் தேர்தலில் போட்டியிட தனக்கொரு சந்தர்ப்பம் பெற்றுத்தருமாறு கேட்டபோதும், இன்றுவரை அதற்கு எந்தவொரு பதிலையும் தரவில்லை என முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் குறிப்பிடுகிறார்.

போரினால் நிர்க்கதியாகியிருக்கும் தமிழ் மக்களின் வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்புவதே தனது உயரிய இலட்சியம் என்றும், விடுதலைப் புலிகளில் இயக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் வாழும் வழி யாதென்று தெரியாமல் துன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது துன்பங்களைத் துடைப்பதற்கு தான் எண்ணியுள்ளதனால் அரசாங்கம் சார்பாக தனது பெயரையும் பதிந்துகொள்ள தான் விரும்பியுள்ளதாகவும் அவர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வட மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு முன்னணி அரசியலாளர்கள் தம்மைச் சந்தித்து அவ்வக் கட்சிகளில் போட்டியிடுமாறு கேட்டுள்ளனர். என்றாலும், தான் ஒருபோதும் அவற்றைச் சார்ந்து அவற்றுக்கு விருப்புத் தெரிவிக்க மாட்டேன் எனவும் தயா மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comments :

கரன் ,  April 29, 2013 at 8:47 PM  

புலி என்றால் இப்படித்தான் என்றால் இப்போதாவது எவராவது ஏற்றுக்கொள்வீர்களா? இன்று முழுப்புலியும் அரசாங்கத்துடன் நிற்கின்றது. ஆனால் புலன்பெயர்ந்த மண்டையள் தொடர்ந்தும் தமிழீழக் கனிவில் மிதக்கின்றது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com