யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலை உச்சத்திலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இந்தநிலையில் புத்தளத்தில் இருந்தும் வியாபாரிகளினால் எடுத்துவரப்படுகின்ற தேங்காய்களும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்டு இலாபமீட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நடமாடும் வாகனங்கள் மூலமாக தேங்காய்கள் எடுத்துவரப்பட்டுப் பிரதான சந்தைகளின் முன்பாகவும் வைத்துவிற்கப்படுகிறது.
35, 40, 55, 60 என பல்வேறு விலைக்குத் தேங்காய் விற்பனை செய்யப்படுகின்றது. தேங்காய் உற்பத்திக்கு பெயர்போன யாழ்.குடாநாட்டில் யுத்தகால சூழ்நிலையினால் பெருமளவு தென்னை மரங்கள் அழிந்து போயிருந்ததன் விளைவினாலும் மீள் உற்பத்தி இல்லாமல் இருந்ததுமே தேங்காய் விலை உயரக்காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment