தொப்பிக்கலயில் பாரம்பரிய பூங்கா மற்றும் இராணுவ ஞாபகார்த்த தூபியைத் திறந்துவைத்தார் பாதுகாப்புச் செயலர் (படங்கள் இணைப்பு)
தொப்பிகலையில் அமைக்கப்பட்ட பாரம்பரிய பூங்கா மற்றும் போரில் நாட்டுக்காக தம்முயிரைத் தியாகம் செய்த இராணுவத்தினரின் ஞாபகார்த்த தூபியை, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று (18) திறந்துவைத்தார்.
அந்நிகழ்வில் அமைச்சின் மகளிர் பிரிவுத் தலைவிஅயோமா ராஜபக்ஷவும் கலந்து சிறப்பித்தார்.
ரூபா 25 மில்லியன் செலவில் டில்மா நிறுவனத்தினரின் அநுசரணையுடன் அமைக்கப்பட்டுள்ள மரபுரிமைப் பூங்காவில், கிழக்கு மாகாண போரின் போதான வெற்றியை நினைவூட்டும் வண்ணம் ஞாபகார்த்தக் காட்சிக் கூடமொன்றும் திறந்துவைக்கப்பட்டுள்ளது. உயிர்நீத்த இராணுவ வீர்ர்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலர் நினைவுத் தூபிக்கு மலர்வளையம் சாத்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பாதுகாப்புப் படைகளின் முக்கிய அலுவலர் எயா சீப் மார்ஷல் குணத்திலக்க, இராணுவத் தளபதி லெப்டிணண்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய, விமானப்படைத் தளபதி எயாமார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம, பொலிஸ் மாஅதிபர் என்.கே. இலங்கக்கோன், சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் உள்ளிட்ட பல இராணுவ உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
விடுதலைப் புலி இயக்கத்தினரிடமிருந்து கிழக்கை மீட்டதன் முக்கிய அம்சமாக தொப்பிகல காணப்படுகிறது. சாம்பூர் - வாகரை போன்ற இடங்களைக் கைப்பற்றிய பின்னர் இராணுவத்தினரால் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொப்பிகல கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment