‘பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உண்மையான ஆரோக்கிய நிலை யாது என நான் காண வேண்டும்... எனக்கு அவரில் நம்பிக்கை கிடையாது’ என ஹிருணிகா பிரேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வா கொலன்னாவ கொட்டிக்காவத்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் பலரை நவலோக்க
வைத்தியசாலைக்கு அழைத்து, அவர்களிடம் எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றி கலந்தாலோசித்து வருகின்றார் என ஊடகங்கள் அறிவிக்கின்ற போதும், அவரது சட்ட ஆலோசகர்கள், துமிந்த சில்வாவின் மனோநிலை சரியாக இல்லை எனக் குறிப்பிடுவது பிரச்சினைக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது வழக்கறிஞர்கள் மூலமாக துமிந்த சில்வாவைப் பார்ப்பதற்கு ஒருமுறை அவகாசம் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும், தனது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ள ஹிருணிகா, நீதிமன்ற வைத்தியரிடம் இதுபற்றிய அறிக்கையொன்றைத் தமக்குக் கையளிக்குமாறு கூறியிருப்பதாகவும், எதிர்வரும் வழக்கின்போது அது தமக்குக் கிடைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment