Saturday, April 13, 2013

"உதயன்" தாக்குதல் உதயனின் சூழ்ச்சியேயாகும்! - லக்ஷ்மன் ஹுலுகல்ல

இன்று (13) அதிகாலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தைத் தாக்கியவர்கள் ‘உதயன்’ நிறுவனத்தினரேயாவர். இது அவர்களால் சோடிக்கப்பட்ட பொய்யாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தை குழப்பத்திற்குள்ளாக்கும் நோக்குடன் இந்தத் தாக்குதல் உதயன் பத்திரிகையுடன் தொடர்புடையவர்களினாலேயே நிகழ்த்தப்பட்டதாகும் எனவும், தாக்குதலுடன் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து அது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தாக்குதல் நடைபெற ஒரு வாரத்திற்கு முன்னர், கிளிநொச்சியிலுள்ள உதயன் பத்திரிகை விநியோக அலுவலகத்தைத் தாக்கியவர்களும் அவர்களே என்றும் லக்ஷ்மன் ஹுலுகல்ல குறிப்பிட்டார்.

அது அவ்வாறிருக்க, ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ரீ. பிரேமானந், ‘தமது பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள் பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.

கிளிநொச்சியிலுள்ள உதயன் பத்திரிகை விநியோக அலுவலகம் தாக்குதலுக்குள்ளானபோது, அவ்விடயம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கு அதுபற்றி அறியக்கொடுத்த போதும், தங்களுக்குச் சாதகமாக எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி கட்டுவனவில் அரசாங்க குண்டர்களால் ஜேவிபி பொதுக்கூட்டமொன்றின் போது ஏற்பட்ட துப்பாக்கித் தாக்குதல் கூட, ஜேவிபியின் இருகுழுக்களுக்கிடையிலான தாக்குதல் சம்பவம் என்றுதான் ஹூலுகல்ல குறிப்பிட்டார்.

என்றாலும் அவர் அவ்வாறு குறிப்பிட்டு சில மணித்தியாலங்களிலேயே முழு நாடும் அதன் சூத்திரதாரிகள் யார் என்பதைக் கண்டுகொண்டனர். எனவும் பிரதம ஆசிரியர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com