Sunday, April 21, 2013

வட மாகாண சபைத் தேர்தல் செப்டம்பர் .. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக முன்னாள் நீதிபதி.

வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஏற்கனவே அறிவித்தபடி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அனுராதபுரத்திலுள்ள விகாரையொன்றிலேயே ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

தேர்தலுக்கான அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ள அதேநேரம் முதன்மை வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் இழுபறி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக முன்னாள் நீதிபதி திரு. விக்னேஸ்வரன் அவர்களை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியினரால் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈபிஆர்எல்எப் சுரேஸ் அணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் முதன்மை வேட்பாளர் இடத்திற்கு கண் வைத்திருக்கின்ற இத்தருணத்தில் தமிழரசுக் கட்சியினரின் இம்முயற்சி கூட்டமைப்பினுள் மேலும் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினரின் கபடத்தனத்தை உணர்ந்து கொண்ட முன்னாள் நீதியரசர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் ஐந்தும் ஒன்றிணைந்து ஏகமனதாக தன்னிடம் முதல்வேட்பாளர் என்ற கோரிக்கையை முன்வைத்தால் அதனை தான் பரிசீலிக்க தயாராக இருப்பதாக தெரிவிதுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் வட மாகாண சபையின் முதலமைச்சருக்கு பொருத்தமானவர் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைபின் 5 கட்சிகளிலும் இல்லை என்பதை கட்சிக்கு வெளியேயிருந்து ஒருவரை கொண்டுவர மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி ஊர்ஜிதம் செய்துள்ளது.

3 comments :

Anonymous ,  April 21, 2013 at 7:42 PM  

Mr.Vickneswaran may be the suitable condidate as he has the academic qualification, experience as a judge
good knowledge about the constitution and constitutional laws.Hope he is much better than any other proverbial dull as dish water politicians

Anonymous ,  April 22, 2013 at 5:08 AM  

நிச்சயமாக முன்னாள் நீதிபதி திரு. விக்னேஸ்வரன் அவர்கள் எல்லோராலும் மதிக்கப்படுகின்ற நேர்மையான மனிதன். அவருக்கு இன,மத, அரசியல் பாகுபாடின்றி பெரும் தொகை மக்களின் ஆதரவு கிடைக்கும்.
அதேவேளை வேறு எந்த ஒரு தமிழ் தேசிய அரசியல் வாதிகளுக்கும் மக்களின் உண்மையான அதரவு இல்லை..
எனவே வடக்கு மாகாணத் தேர்தலில் அந்த நேர்மையான மனிதர் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

வன்னி சமுதாயம்.

Anonymous ,  April 22, 2013 at 12:25 PM  

Hope he would gladly accept the decision made by the seniors of the party.He need not bowed to the inevitable.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com