யாழில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளின் போது மக்களின் அழைப்பிலேயே இராணுவத்தினர் வருகின்றனர்-மொகமட் ஜெப்ரி
யாழில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளின் போது பொலிஸாருக்கு இராணுவத்தினருடைய ஒத்துழைப்புத் தேவை என்று அந்த பிரதேசத்தின் மக்கள் வேண்டுவதன் நிமிர்த்தம் பாதுகாப்புக்காக அவர்களாகவே சம்பவ இடங்களிற்கு வருகின்றார்கள் என்றும் யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி தெரிவித்தார்.
04.06.2013 காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களால் யாழில் நடைபெறும் சம்பவங்கள் நிகழ்வுகளில் இராணுவத்தினரும் பொலிஸாருடன் இணைந்து செயற்படுகின்றனர். பொலிஸாரால் சிவில் நிர்வாகத்தினை இராணுவத்தின் உதவியுடன் தான் நடத்த முடியுமாக என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மொகமட் ஜெப்ரி பொலிஸாருடைய கடமை பொது மக்களுடைய பாதுகாப்புபினை உறுதிப்படுத்திக் கொள்ளல் மற்றும் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதன் ஊடாக சிவில் நிர்வாகத்தினை நடாத்தலாகும். எனினும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சம்பவங்கள் போது இராணுவத்தினரை நாம் அங்கு அழைப்பது இல்லை. ஆனால் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதான எமக்கு தகவல் தரும் பொது மக்களே இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கின்றனர். இதனால்தான் இராணுவத்தினர் அங்கு சமூகமளிக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் இவ்வாறு சிவில் நிர்வாக நடவடிக்கைகளின் போது இராணுவத்தினருடைய பிரசன்ணம் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment