1984 ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களாக இருந்த 2 சீக்கியர்களே சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து டெல்லி உட்பட நாட்டின் பல இடங்களில் சீக்கியர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைச் சம்பவமானது சீக்கியர்கள் மனதில் ஆறாத வடுவாக இருந்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீக்கியர்களுக்கு நீதி கோரும் அமைப்பு இணையம் வழியே ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது. 1984 ம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையாக அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்பதற்காக இணைய தளத்தின் கையெழுத்தியக்கம் நடத்தியது.
இதுவரை 30,517 பேர் கையெழுத்திட்டிருக்கின்றனர். இந்த பிரச்சாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா வின் வெள்ளை மாளிகையின் அறிக்கையில், 1984 ம் ஆண்டு மற்றும் அதன் பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையான மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். இதை அமெரிக்கா தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டு கருத்துகளை தெரிவித்து வருகிறது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இனப்படுகொலை எனப் பிரகடனப்படுத்த மறுத்திருக்கிறது.
இதனூடாக அமெரிக்காவின் நடுநிலைமை தொடர்பில் விளங்கி கொள்ள முடிகின்றது என சீக்கிய அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளது. இனரீதியாக கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெட்டத்தெளிவாக ஏற்றுக்கொள்ளும் அமெரிக்கா அதனை இனப்படுகொலை என அறிவிப்பதற்;கு தயக்கம் காட்டுவதன் நோக்கம் என்ன என்ற கேள்வியை அந்த அமைப்புக்கள் எழுப்பியுள்ளது.
If jaya want kachchativu , then sri lanka with China together Need to bring a this matter to UNO
ReplyDeleteJustice is done only to the weak justice is frightened to reach the
ReplyDeleteothers.because of favouritsm,nepotism and the strong personality of the doers.