Saturday, April 27, 2013

பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கான வரவேற்பில் அரச அதிகாரிகள் கலந்து கொள்ள கூடாது-அமைச்சு

பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை வரவேற்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வுகளை உடன் நிறுத்துவதுடன் அந்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர்கள் உட்பட அரச அதிகாரிகள் எவரையும் கலந்து கொள்ளவேண்டாம் என்றும் பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதி தேசத்தின் அபிவிருத்தி என்ற தலைப்பில் 2012 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை வரவேற்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் உள்ள தேர்தல் தொகுதிகள் ரீதியாக நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அந்த நிகழ்வுகளையே உடன் நிறுத்துமாறும், அந்த நிகழ்வுகளில் அரச அதிகாரிகள் எவரும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்து பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று சம்பந்தப்படட திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து பல்கலைக்கழங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட சுமார் 625 மாணவர்களுக்கான வரவேற்கும் நிகழ்வு நாளை வவுனியாவில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment