Wednesday, April 24, 2013

அமெரிக்க குண்டுவெடிப்பு அண்ணன் மீது காரை ஏற்றி கொன்ற தம்பி.

எந்த பயங்கவாத அமைப்புடனும் தொடர்பில்லையாம்.இஸ்லாந்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பழிவாங்கலாம்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மரதன் போட்டியில் வெடிகுண்டு வைத்த சகோதரர்களில் ஒருவனை இன்னொருவனே காரை ஏற்றிக் கொலை செய்ததாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றது. குறித்த குண்டு வெடிப்பு தொடர்பில் தேடப்பட்டு வந்த செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்த தமேர்ன் சர்னயேவ் (26), ஷோக்கர் (19) இருவரும் பாஸ்டனின் வாட்டர்டவுன் பகுதியில் இரண்டு கார்களைக் கடத்தி அதில் தப்பிச் சென்றபோது இருவரையும் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

இதையடுத்து காரில் இருந்து வெளியே குதித்த தமேர்லான் போலீசாரை நோக்கி சுடவே பதிலுக்கு போலீசார் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த தமேர்லானுக்கு கைவிலங்கு மாட்ட போலீசார் நெருங்கிய போது இன்னொரு காரில் இருந்த ஷோக்கர் அதை மிக வேகமாக இயக்கி தனது அண்ணனையே காரை ஏற்றிக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளான்.

இதைத் தொடர்ந்து 48 மணி தேடுதல் வேட்டைக்குப் பின் வாட்டர்டவுன் பகுதியில் ஒரு படகில் பதுங்கியிருந்த ஷோக்கரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.


காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் உடல் நிலை தேறி வருவதாக, அறிவிக்கப்படுகிறது. பேசுவதற்கு முடியுமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து, வாய்மூல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மற்றொரு சகோதரர் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக சோகார் ஸர்னயேவ் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கும், இத்தாக்குதலுடன் தொடர்பு இல்லையென்றும், அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளும் அநீதிகளுக்கு எதிராகவே, தனது சகோதரன் இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும், கூறியுள்ளார்.

அமெரிக்காவின் செயற்பாடுகளினால் இஸ்லாத்திற்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் அநீதிகள் இழைக்கப்படுவதுமே, இதற்கு காரணமென்றும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com