Friday, April 26, 2013

இலங்கைக்கெதிரான வாசகங்களடங்கிய பதாதைகளுடன் மைதானத்திற்குள் நுழைய முயன்றவர்கள் கைது

இலங்கைக்கெதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் ஐ.பி.எல். போட்டிகளை காணச் சென்ற 28 பேர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் மாணவர்கள் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்கள் இலங்கைக்கு எதிராக வாசகங்கள் பொறிக்கப்பட்ட உடை அணிந்து மைதானத்திற்குள் நுழைய முற்ப்பட்டதாகவும் இவர்களை இடைமறித்த பொலிசார் அவர்களை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியின் இலங்கைக்கெதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் சென்றவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கை வீரர்கள் தமிழகத்தில் மாத்திரமன்றி இந்தியாவில் எந்தவொரு பகுதியிலும் விளையாடக்கூடாது என கூறி மாணவர்கள் ஊர்வலமாக சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

4 comments :

ஈய ஈழ தேசியம் ,  April 26, 2013 at 4:17 PM  

தடா என்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டத்தின் கீழ் வைகோவை நீண்ட காலம் சிறையில் போட்டது போல் இந்த 28 பேரையும் தூக்கி உள்ளே போட்டு நீண்டகாலம் வைத்திருக்க வேண்டும்.

Anonymous ,  April 26, 2013 at 5:33 PM  

மாணவர்களுக்கு ஏன் இந்த தேவையற்ற வம்பு? தமிழக அரசியல் கோமாளிகளின் கபடத் தனங்களில் மாணவர்கள் வீணாக சிக்குண்டு தங்கள் வாழ்க்கையை தொலைக்க போகிறார்கள். அன்று ஈழத்து தமிழ் அரசியல் வாதிகள் இதேபோன்று யாழ்ப்பாணத்தில் மாணவர்களை உசுப்பேத்தி, முட்டாள் தனமான செயல்களை செய்யத் துண்டி, கடைசியில் தமிழ் மக்கள் கொலைகள், அழிவுகள், இழப்புக்கள், துன்பங்கள், சோகங்களை கண்டது மட்டுமல்ல வீடு, வாசல்கள் இழந்து உண்ணவும் வழியில்லாமல் கையேந்தும் நிலைக்கு
தள்ளப்பட்டதே சரித்திரத்தில் எழுதப்படட உண்மை..

முதலில், இதை புரிந்து கொள்வது நல்லது.

Anonymous ,  April 26, 2013 at 7:45 PM  

Students can change themselves as true politicians later on in their lives,once they completed their proper education.They defnitely cannot play political games while they are being students.Some "Thrash "politicians make use of these guys as tools for their political games.It doesn`t matter,be sure the students cannot achieveanythingbytheirfoolishprotests,demonstration,hunger strike etc etc.SRILANKA is a soverign country.It cannot be dictated by any strangers.They can make protests demonstrations even violent activities against our Srilankan players,this make us to easily understand about their evil minds.

Anonymous ,  April 27, 2013 at 10:25 AM  

We think those who called themselves as students have adopted the" south Indian film style actions" as their behaviour which will never and never suit in the real life.Let them create a fantasy world for themselves
We think that their thoughts are almost escapist fantasies

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com