Saturday, April 27, 2013

மண்ணையும் புண்ணாக்கலாமா?

உணவு உற்பத்திக்கு அடிப்படை விவசாயம். விவசாயத்திற்கு அடிப்படையானது மண், மண்ணை வளப்படுத்துவதுதான் விவசாயத்திற்கு முக்கியம். மண் என்பது இரசாயனப் பொருள் இல்லை. மண் உயிருள்ளது உயிரோட்டம் உள்ளது நுண்ணுயிர்கள் நிரம்பியது. அந்த நுண்ணுயிரிகள் நலமாயிருந்தால் மண் ஆரோக்கிய மாயிருக்கும். ஆரோக்கியமான மண்ணிலிருந்துதான் ஆரோக்கியமான உணவும் விளையும். மாறாக, இரசாயனம் இட்டு மண்ணைச் சுரண்டுவதால் நமக்கு நோய்களே விளையும்.

கி.பி.800 ஆம் ஆண்டளவில் வாழ்ந்து விவசாயத்திற்கு இலக்கண நூல் எழுதிய காஷ்யபர் மண்ணை மேதினி என்கிறார். மேதினி என்றால் வளமை, செழுமை, முழுமை என்று பொருளுண்டு. மேதினிக்கு காஷ்யபர் வழங்கும் விளக்கமாவது: மனி தனுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பல்லுயிர்களுக்கும், உணவைத் தருவதால் மண் மேதினி. மண்ணில் நோய்தீர்க்கும் மூலிகைகள் விளைவதால் மேதினி. மண் உயிர்க்காற்றாகிய ஒட்சிசனை உள்ளடக்கிய நீருற்றுகளை வழங்குவதால் மேதினி... என்றவர் எழுதிச் செல்கிறார்.

மொத்தப் புவியின் நிலப்பரப்பில் உள்ள விளைநிலமே மேதினி. இந்த மேதினியை நாம் பாழடித்தவண்ணம் உள்ளோம். இரசாயன உரமிட்டும், பூச்சிமருந்து அடித்தும் நஞ்சாக்கிவிட்டோம். மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை மாசுகளால் புண்ணாக்கி விட்டோம். இரசாயனங்களைக் கொட்டி மலடாக்கி விட்டோம்.

நகரங்களில் வாழும் மக்களுக்கு நமது உணவு எப்படி விஷ மாகிறது என்ற அடிப்படை புரியாமல் வாழ்கிறார்கள். கிராமங் களில் வாழ்பவர்கள் குறிப்பாக விவசாயிகளில் பலர் இவையெல் லாம் விஷம் என்ற புரிதல் இல்லாமல் யூரியாவையும் இதர இர சாயனங்களையும் பலதரப்பட்ட பூச்சிமருந்துகளையும் பயன் படுத்துகின்றனர். பூச்சிமருந்தல்ல அவை. விஷமான உயிர்கொல் லிகள் அவை. பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொள் பவர்களை நாம் அறிவோம். இந்த மருந்தை பயிர்களுக்கென விசிறுவதும் ஒருவகையில் தற்கொலையே.

பூச்சிமருந்துகள் சாதாரணமாக அடித்த சில மணிநேரங்களில் ஆவியாகிவிடும் என்றும் இதனால் எதுவும் தீமை இல்லை என் றும் பலர் நம்புவதுண்டு. ஆவியாவது சரியே. அடிக்கப்படும் மருந் தால் தீமை செய்யும் பூச்சி பூசணங்கள் மடிவதும் சரியே. ஆனால் பக்கவிளைவுகள் பயங்கரமானவை. பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளும், பறவைகளும் கூட அழிகின்றன. இயல்பான மகரந்தச் சேர்க்கை பாதிப்புறுகிறது. பயிர்மீது அடிக்கப்படும் மருந்து மண் ணில் விழுந்து மண் விஷமாகிறது. பயிர்களின் தண்டுகள் வழியே ஊடுருவிப்பாய்ந்து காய்கறி, பழங்கள், தானியங்களில் அந்த விஷம் எஞ்சி நிற்கிறது.
எந்த விஷமும் நமது உடலில் அனுமதிக்கப்படும் அளவில் செல்லும்போது பிரச்சினை இல்லை. அனுமதிக்கப்படும் அளவு இலட்சத்தில் ஒரு பங்கு என்றால் நாம் உண்ணும் இரசாயன விவசாய உணவுகளில் இத்தகைய விஷம், இந்த அளவுக்கு மேல் நூறு முதல் 200 சதவீத அளவுக்கு அதிகம் உள்ளதாக பரிசோத னைக்கூட முடிவுகள் தெரிவிக்கின்றன.

இரசாயனம் - பூச்சிமருந்து விவசாயத்தால், நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகள், தானியங்களில் அனுமதிக்கப்பட்ட அள வுக்கு மேல் எஞ்சியுள்ள விஷம் நமக்கு ஏற்படுத்தும் நோய்களின் பட்டியல் தலை சுற்றவைக்கும். ஓர்கனோகுளோரின் கலந்த உணவு மூலம் வயிற்றுப்போக்கு, ஈரல் நோய், மூத்திரப்பை அடைப்பு, பித்தப்பை அடைப்பு, சிறுநீரகத்தில் கல், கொலரா, புற்று நோய் ஏற்படும். ஓர்கனோ பொஸ்பரஸ் விஷத்தினால் பல்வேறு வாதநோய்கள், நரம்புமண்டலக் கோளாறு, உடல்வலி, புற்று நோய், இதயவலி வரும். யூரியா உரம் போட்டு வளர்த்த உணவு மூலம் இரத்தசோகை ஏற்படும்....மண்ணைப் புண்ணாக்காத விவசாயத்திற்கு நாம் மாற முடியாதா?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com