Friday, April 12, 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்நாட்டு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அதன் மூலமே அவர்கள் செய்த தவறுகளை உணர்ந்துள்ளார்கள் என்பதை உணர முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்த்துள்ளார் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது மெளனம் சாதித்ததுடன், இந்திய வீட்டுத் திட்டத்திலிருந்து ஒரு வீட்டையேனும் முஸ்லிம்களுக்கு தரவிரும்பாத சம்பந்தன் முஸ்லிம்கள் பற்றி பேசுவது கேலிக்குரிய விடயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நான்கு திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில் முஸ்லிம்களை கொலை செய்தவர்கள், விரட்டியடித்தவர்கள் முஸ்லிம்கள் பற்றி பேசஅருகதையற்றவர்கள். எனவே சம்பந்தனின் பேச்சுக்கு ஒரு தடவையல்ல சகல தடவைகளிலும் குறுக்கீடு செய்வேன் என்றார்.

வடபகுதி மக்களுக்காக சம்பந்தன் எதனையும் செய்யவில்லை. மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 226 பில்லியன் ரூபாவை யாழ் அபிவிருத்தி பணிகளுக்காக செலவு செய்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையில் முஸ்லிம்கள் பற்றி பேசிய போது நான் மற்றும் காதர் ஆகியோர் எதிர்த்ததாக தமிழ் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

நாம் எதிர்த்தோம் என்றால் அதற்கு காரணம் உள்ளது. புலிகள் காத்தான்குடி பள்ளி வாசலில் முஸ்லிம்களை படுகொலை செய்தார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது சம்பந்தன் ஐயா எதுவும் பேசவில்லை. இந்தியாவின் 56 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தில் முஸ்லிம்களுக்கும் வீடு கொடுங்கள் என்று ஆரம்பத்தில் சுபியான் மொளலவி கேட்ட போது சம்பந்தன் ஐயா விரும்பவில்லை. அங்கே சுபியான் மெளலவி யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றி பிரச்சினைகளுக்கு குரல் எழுப்பிக் கொண்டு இருக்கின்றார்.

இந்திய எம்.பிக்களின் இலங்கை விஜயமானது ஜயலலிதா அம்மாவுக்கும், கருணாநிதிக்கும் கன்னத்தில் அறைந்தது போன்ற செயற்பாடாகும். இந்திய எம்.பிக்கள் குழு பாராளுமன்றத்திற்கு வருகைதந்தார்கள். அதேபோன்று ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை பார்வையிட யாழ்ப்பாணம் சென்றிருந்தனர்.

பிரபாகரன் படுகொலை செய்யப்படும் வரை ஜெயலலிதா துப்பாக்கி குண்டுகள் துழைக்காத கவசஉடை அணிந்திருந்தார். தற்போது தனி நாடு குறித்து பேசுகின்றார். இது ஆடு நனையிது என்று ஓநாய் அழுவுது போன்றதாகும். மத்திய விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் கிழக்கு முஸ்லிம்கள் சந்தோசமடைகின்றனர், விரும்புகின்றனர். ஏனெனில் வருடாந்தம் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற செல்லும் போது இலகுவாக செல்ல முடியும்.என்று குறிப்பிட்டார்.

4 comments :

Anonymous ,  April 12, 2013 at 9:06 PM  

This is a correct info to our public.

Where those TNA govrawae MP has been,when LTTE done so terrable actions for Musleems, Singhalees and Tamils???????????

Bloddy LTTE and TNA
! Thay are not a peoaple!

Anonymous ,  April 13, 2013 at 7:09 AM  

அன்று விரும்பியோ, விரும்பாமலோ புலிகளுக்கு அடி பணிய வேண்டிய நிலை எல்லோருக்கும் ஏற்பட்டது உண்மை. அந்த நேரத்தில் பதவிகளை துறந்து, அரசியலிருந்து விலகி, நடுநிலையாக இருந்திருக்கலாம்,

ஆனால், அதை விட்டு வடக்கில் தங்கள் அரசியல் நலனுக்காக தொப்பியை புலிகள் பக்கம் பிரட்டியதன் விளைவை இன்று தமிழ் கூட்டணி உணர்ந்து வருகிறது.

எனவே, இதேபோலவே எந்த ஒரு அரசியல் வாதியும், தனது சுயநலத்திற்காக இன்று தொப்பியை மகிந்த அரசாங்க பக்கம் பிரட்டினால், விளைவுகளை பின்னர் ஒரு நேரம் கட்டாயம் சந்திக்க நேரிடும்.

சரி, முடிந்தது முடிந்து போகட்டும். இவை எல்லாம் எமக்கு பாடங்களாக அமையட்டும். எனவே, இனி வரும் காலங்களில் இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களின் எதிகாலம் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன், தமிழ், முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்கள் சுயநலங்களை விட்டு,
மக்களின் நலன்களுக்காக ஒற்றுமையாக சேர்ந்து செயல்பட வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

எனவே, இன்றிலிருந்து தமிழ், முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒருவரை ஒருவர் குறை, குற்றம் கண்டு காலத்தை ஓட்டலாம் என்ற நோக்கம், சிந்தனையை கைவிடுகள்.

ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்காக ஒன்றுபடுங்கள். ஒற்றுமையாக குரல் கொடுங்கள்.
அல்லாவிடின், தயவு செய்து அரசியலிருந்து விலகி விடுங்கள்.

நன்றி.

Anonymous ,  April 13, 2013 at 10:09 AM  

kanakkil illathavar...

Anonymous ,  April 14, 2013 at 5:28 AM  

<>

Very good advice!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com