ஞானாஸார தேரரால் இனிமேல் அறிக்கை வழங்க முடியாது..! - பொது பல சேனா (அறிக்கை இணைப்பு)
பொதுபல சேனா இயக்கத்தினால் இன்று (16) விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், ‘இதுவரை பொதுபல சேனா சார்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அதன் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானஸார தேரர் அவர்களுக்கு இனிமேல்ஊடகங்களுக்கு அறிக்கை வழங்கும் அதிகாரம் இல்லை என்றும், அந்த அதிகாரம் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் அதன் உயர் பீட உறுப்பினர் திலந்த விதானகேவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில்,
‘இதுவரை பொதுபல சேனாவின் ஒரு பிரிவாக செயற்பட்டு வந்த ‘சிங்கள ராவய’ மற்றும் ‘ராவண பலய’ ஆகிய இயக்கங்கள் பொது பல சேனாவின் பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் செயற்பட்டமை, ஒழுக்கத்துடன் செயற்படாமை ஆகிய காரணங்களால் இவற்றுடனான சகல தொடர்புகளையும், 2013/04/10 ஆந் திகதி முதல் பொதுபல சேனா துண்டித்துள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த உயர்பீடக் கூட்டமானது கடந்த ஏப்ரல் 07ஆந் திகதி பொதுபல சேனாவின் செயலாளர் ஞானாஸார தேரர் தலைமையிலான குழு அமெரிக்கா சென்ற பின்னர், 9 ஆம் திகதி கூட்டப்பட்டே இந்த அவசர முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு குறித்த அறிக்கைகளையும் திலந்த விதானகேதான் விடுத்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment