Thursday, April 18, 2013

பயங்கரவாதத்திற்கு துணை நிற்கும் ஊடகங்களுக்கு உதவி வழங்குவதை நிறுத்துவீர். சுவிற்சர்லாந்து தமிழ் வர்த்தகர்கட்கு அறிவுறுத்தல்.

சுவிற்சர்லாந்தில் அண்மைக்காலமாக செயற்பட்டுவரும் „வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அமைப்பு' இலங்கையில் பயங்கரவாதத்தை தூண்டும் நோக்கில் செயற்படுகின்ற ஊடகங்களுக்கு அனுரணை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுமாக சுவிற்சர்லாந்திலுள்ள தமிழ் வர்த்தகர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் தூண்டும் நோக்குடன் செயற்படும் ஊடகங்களுக்கு விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகள் வழங்குவதன் ஊடாக நிதி உதவி செய்கின்ற வர்த்தகர்களை இனம்கண்டு கொண்டுள்ள மேற்படி அமைப்பினர், அவர்கட்கு பிரத்தியேகமாக கடிதங்களை அனுப்பி, தமது செயற்பாடுகளை மீள் பரிசீலனை செய்யுமாறு வேண்டியுள்ளனர்.

தமது கடிதத்தலைப்புடன் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள அந்த வேண்டுதலில் :

எமது நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டை பயன்படுத்தி உள்ளுர் சர்வதேச ஆதிக்க சக்திகள் தமது சுயநலத்திற்காக கடந்த 30 வருடங்களாக பயங்கரம் நிறைந்த போர் ஒன்றை திணித்து வந்துள்ளனர்.

இன்று போர் முடிவுக்கு வந்து சமாதனம் ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்திப்பாதையில் சர்வதேச தரங்களுக்கீடாக நாடு முன்னேறி வருகின்ற நிலையில் ஊடகங்கள் என்று உருமறைப்புச் செய்யப்பட்ட பயங்கரவாதம் புலம் பெயர் தேசங்களில் இருந்து மீண்டும் எம்மை போருக்குள் தள்ளிவிட முயன்று வருகின்றன என்பதை தாங்கள் அறிவீர்கள்.

கடந்த காலங்களில் நாங்கள் பல்வேறு காரணங்களால் அறிந்தும் அறியாமலும் சூழ்நிலை நிற்பந்தங்களாலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவியிருக்கின்றோம் என்பது கசப்பான உண்மை. ஆகவே நாமும் ( புலம்பெயர்தமிழர்கள் ) போர் குற்றவாளிகள் என்று ஐநா அறிக்கையிலும் ஆதாரப்படுத்தியிருக்கிறார்கள்

தாங்கள் நேரடியாகவோ மறைமுகவாகவோ வேறு எந்த ரூபத்திலோ ஆதரவு தருவதும் ஓரு பயங்கரவாத செயற்பாடுதான்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும் அவர்கள் எந்த எந்த பயங்கரவாதத்திற்கு துணைபோகும் ஊடகங்களுக்கு துணை நிர்கின்றார்கள் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment