Thursday, April 4, 2013

வட கொரியாவின் வீராப்புப் பேச்சால் சங்கடத்தில் சிக்கியுள்ள சீனா

வட - தென் கொரியாக்கள் வட கொரியாவின் கேசோங் நகரின் இணைந்து உருவாக்கிய கைத்தொழிற்பேட்டைக்கு தென் கொரிய ஊழியர்கள் செல்வதை வட கொரியா தடுத்ததைத்தொடர்ந்து கொரியத் தீபகற்பகத்தில் மீண்டும் பதட்டம் எழுந்ததுள்ளதால் சீனா இது தொடர்பாக தனது கடும் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

சீனாவின் அயல் நாடும் ஒரே ஒரு நட்பு நாடும் வட கொரியாவாகும். ஆனாலும் இரு நாடுகளும் ஒன்றை ஒன்று பலத்த சந்தேகத்துடன்தான் நோக்குகின்றன. சோவியத்தின் நட்பு நாடாக இருந்த வட கொரியா 1991இல் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனித்து இயங்கத் தீர்மானித்தது. ஆனாலும் பல பொருளாதாரப் பிரச்சனைய்களை வட கொரியா எதிர் நோக்கவேண்டி இருந்தது.

முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்த தென் கொரியா பெரும் பொருளாதார வளர்ச்சியடைந்து ஆசியாவில் இரண்டாவது வளர்ச்சியடைந்த நாடாகியது. வட கொரியப் பொருளாதாரப் பிரச்சனை அங்குநிலவிய அரசைக் கவிழ்த்தும் தென் கொரியாவைப்போல் ஒரு அமெரிக்க ஆதரவு நாடாக மாறாமல் இருக்க சீனா வட கொரியாவிற்கு பல பொருளாதார உதவிகளைச் செய்து வருகிறது.

எனினும் 1961இல் சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் வட கொரியா தனது அணுத் தொழில் நுட்பத்தை தொடக்கியதுடன் 1961 ஆண்டே அணுமின் உலையை உருவாக்கியதுடன் 1985இல் மேலும் அதை அபிவிருத்தி செய்தது. இதனை விரும்பாத அமெரிக்காவும் தென் கொரியாவும் 1994இல் வட கொரியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டதன் முலம் வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தியது.

பின்னர் மீண்டும் 1991இல் பாக்கிஸ்த்தானிய அணு விஞ்ஞானி யு ஞ கானிடமிருந்து யூரேனியம் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தைப் வட கொரியா பெற்றுக் கொண்டதுடன் 1998இல் ஏவுகணைத்தொழில் நுட்பத்தையும் விண்வெளிக்கு செய்மதிகளை அனுப்பும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியதால் வட கொரியா அமெரிக்காவுடனும் தென் கொரியாவுடனும் 1994இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி அணுக் குண்டுகளை உருவாக்க ஆராய்ச்சிகள் செய்வதாக 2002 ஆம் ஈண்டு அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இதனைத்தொடர்ந்து 2003இல் வட கொரியா பன்னாட்டு அணுப்படைக்கலன் பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன் 2006 ஆம் ஆண்டு முதலாவது அணுக்குண்டை வெடிக்கவைத்து பரிசோதித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா,சீனா, தென் கொரியா, றசியா, யப்பான் ஆகிய ஆறு நாடுகளுடன் வட கொரியா ஒரு அணுக்குண்டு தொடர்பான பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு வடகொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்துவதாகவும் பன்னாட்டு அணுப்படைக்கலன் பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் மீளிணைவதாகவும் அறிவித்தது. இதற்கு பதிலாக வட கொரியாவிற்கு நிதி உதவி செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து 2008இல் வட கொரிய தனது அணு உலை ஒன்றை மூடியது.

எனினும் மீண்டும் 2009இல் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கிய வட கொரியா ஆறுநாடுகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருந்து விலகியதுடன் 2009 ஜூனில் தனது இரண்டாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. எனினும் உலகப் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பல வட கொரியர்கள் வறுமையால் வாடினார்கள். இதைத் தொடர்ந்து 2012 பெப்ரவரியில் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தி அமெரிக்காவில் இருந்து உணவைப் பெற்றுக் கொன்டது.

2012 டிசம்பரில் வட கொரியா தனது பலதட்டு ஏவுகணையை விண்ணில் செலுத்த முயன்ற போது அது இரண்டு நிமிடத்தில் வெடித்துச் சிதறியதுடன் 2013 மார்ச்சில் வட கொரியா தனது மூன்றாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்ததைத் தொடர்ந்து வட கொரியாவிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் புதிய தடைகள் நிறைவேற்றப்பட்டது.

வட கொரியாவின் மூன்றாவது அணுக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தென் கொரியாவில் தனது படைபலத்தை அதிகரித்து வருகிறது. வட தென் கொரிய முறுகல் நிலை ஒரு புறம் கிழக்குச் சீனக் கடலில் சீன ஜப்பான் முறுகல் மறுபுறம் யப்பானியக் கடலும் மஞ்சள் கடலும் கொதி நிலையில் இருக்கையில் ஒரு தவறான படை நடவடிக்கை பெரும் மோதலை உருவாக்காமல் இருக்கவே ஐக்கிய அமெரிக்கா தனது தென் கொரியாவைப் பாதுகாக்கும் படை நகர்த்தல்களைப் பகிரங்கமாகச் செய்து வருகிறது.

அமெரிக்காவின் நவீனரக விமானங்கள் சீனாவின் கிழக்கு புறத்தில் நடமாடுவதை சீனா விரும்பவில்லை. ஆனால் வட கொரியா ஒரு அணுக்குண்டு நாடாக மாறுவதை அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது. வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியை சீனா தடுக்காமல் இருப்பது பல படைத்துறை வல்லுனர்களை ஆச்சரியதில் ஆழ்த்தியுள்ளது.

அது மட்டமல் அமெரிக்கா மீது அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக வட கொரியா விடுத்த மிரட்டல் சீனாவைச் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் வட கொரிய சீன நாடுகளுக்கும் இடையில் நட்பு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளநிலையில் வட கொரியாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் சீனாவை அதிருப்திக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியுள்ளதுடன் வட கொரியாவையும் தனது பகை நாடாக மாற்ற சீனா விரும்பவில்லை. காரணம் ஏற்கனவே சீனாவை பல எதிரி நாடுகள் சுற்றித்திரிகிறது.

ஜப்பான்,வியட்னாம், பிலிப்பைன்ஸ் உடபடப் பல நாடுகளுடன் கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் கடுமையான முறுகல் நிலையுடன் இருக்கிறது சீனா. வட கொரியா தென் கொரியாவாலும் அமெரிக்காவாலும் ஆக்கிரமிக்கப்பட்டோ அல்லது ஒரு உள்நாட்டுப் புரட்சியின் மூலமோ வட கொரியா அமெரிக்க சார்பு ஆட்சியாளர்களின் கைகளுக்குப் போவதையும் சீனா விரும்பவில்லை. ஆனால் கடந்த காலங்களில் சீனாவின் பல ஆலோசனைகளை வட கொரியா நிராகரித்திருந்தது.

அதிலும் முக்கியமாக தனது நாட்டின் பொருளாதாரக கொள்கைகளை ஒத்த பொருளாதாரக் கொள்கையை வட கொரியாவில் கடைப்பிடிக்கும் படி சீனா வட கொரியாவிற்கு ஆலோசனை வழங்கியபோது அதனை வட கொரியாவால் நிராகரிக்கப்பட்டது. சீனா வட கொரியாவிற்கு வழங்கிவரும் உதவிகளை நிறுத்தினால் வட கொரிய ஆட்சி கவிழ்ந்து விடும். இதனால் சீனாவால் வட கொரியாவை அடக்க முடியும் என மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் உறுதியாக நம்புவதால் தற்போது சங்கடத்தில் மூழ்கியுள்ளது சீனா.

1 comments :

Anonymous ,  April 5, 2013 at 11:26 AM  

China too a superpower country.It has the diplomatic tactics,talents to face every difficulties.These are inevitable to every single country.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com