ஜெனீவா பிரேரணையை அரசாங்கம் நிராகரித்தால் நாடு இரண்டாகத் துண்டாடப்படுவதை யாராலும் தடுக்கவியலாது!
ஜெனீவா பிரேரணையை அரசாங்கம் நிராகரிப்பதற்கு முயல்வதாகவும், அவ்வாறு நிராகரித்தால் நிச்சயம் அரசாங்கம் இரண்டாகத் துண்டாடப்படுவதை யாராலும் தடுக்கவியலாது எனவும் தேசிய இளைஞர் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறிப்பிடும்போது, ஜெனீவாவில் வெற்றிபெற்றுள்ள பிரேரணைகளில் உள்ளவை யா தெனில், இந்நாட்டினுள்ளே சுதந்திரமான முறையில் நீதிமன்றமொன்றை நடாத்திச் செல்வதற்கு ஆவன செய்தல், பொதுமக்களிடையே ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புதல் போன்ற சிறந்த யோசனைகயே ஆகும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரேரணைகளை நிராகரிப்பதென்பது நாட்டில் சுயேட்சையான நீதிமன்றம் ஒன்று மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இல்லாமற் செய்வற்கேயாகும் என்றும் தலைவர் குறிப்பிட்டுள்ளார். பல நாடுகள் ஒன்றிணைந்து எடுத்துள்ள இந்தத் தீர்மானத்தை நிராகரிப்பதானது, அந்நாடுகளிடையே கசப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய செயல் என்றும், நாட்டுக்குள் சுயாதீனமான முறையில் கருமங்களை ஆற்றமுடியாமற் போவது நாட்டை இரண்டாக்க் கூறுபோடக் கூடிய செயல் என்றும், அவ்வாறு இரண்டுபடுவதை யாராலும் தடுக்கவியலாது என்றும் ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
2 comments :
What we can say about this comments
May be to gain a kind of political popularity
UNP , JVP also behind of LTTE Diaspora and USA , that why he told like that, but our president will win every challenge against our Country, USA same to a dust now , see now what is with North Korea and what happend in USA , they need to look their own matter and not to put nose in other countries.
Post a Comment