கடந்த ஆறு (06) மாதங்களாக வவுனியாவில் இரவு வகுப்புக்களை கல்வி நிலையங்களில் நடாத்தவும், ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புக்களை நடாத்தவும் இலங்கை பொலிஸ் அதிகாரிகளும், நீதிபதியும், முன்னாள் வவுனியா மாவட்ட அரச அதிபரும், பிரதேச செயலாளரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை மாணவர்கள் தத்தம் சமய அனுட்டானங்களை பின்பற்றவும், பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு இத்தகைய உத்தரவுகளை நாகரிகமான முறையில் சட்ட ரீதியாக அறிவித்திருந்தது.
ஆனால் இன்று அச் சட்டங்களையும், உத்தரவுகளையும் மீறி வகுப்புக்கள் நடைபெறுகின்றன. கிராமப் புறங்களில் கல்வி நிலையங்கள் சட்ட'ர்வமான தகவல்களை ஏற்றுக்கொண்ட போதும் வைரவபுளியங்குளம், குருமன்காடு பகுதிகளில் பிரசித்தி பெற்ற கல்வி நிலையங்களும், பிரசித்தி பெற்ற அசிரியர்களும் வகுப்புக்களை தன்னிச்சையாக நடாத்துவது அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
குறிப்பாக செட்டிகுளம் பகுதிகளில் இருந்து வவுனியா நோக்கி வரும் மாணவர்கள் 6.00 மணி வரை பஸ்ஸிற்காக காத்திருந்து செல்ல வேண்டிய நிலைப்பாடு உருவாகியிருக்கின்றது. இந் நிலையை சட்டங்களை உருவாக்கிய அதிகாரிகள் கண்டும் காணாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
வீனஸ் கல்லூரி, ஒக்ஸ்பொட் கல்வி நிலையம், சயன்ஸ் ஹோல், சீ.பி.ஏ கல்வி நிலையம், எக்ஸ்பிறஸ் கல்வி நிலையம் என்பன இத்தகைய குற்றச்சாட்டுக்குள் உள்ளாகியிருக்கின்றன என குறிப்பிடப்படுகின்றன. அதே வேளை சில தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் குழு வகுப்புக்களை இரவு 7.00 மணி வரை நடாத்துவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். இது குருமன்காடு பகுதியில் அதிகளவில் இடம் பெறுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
23.04.2013 அன்று மாலை 6.55 மணியளவில் பிரசித்தி பெற்ற கல்வி நிலையத்தில் வகுப்புக்களை முடித்துவிட்டு வீடு செல்ல பஸ்ஸிற்காக காத்திருந்த உயர்தர வகுப்பு பெண் தனது பொருளியல் ஆசிரியருடன் வீதியில் நின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். பாதுகாப்பிற்காக அவ் ஆசிரியர் நின்றிருந்தாலும், சமூகத்தின் பார்வை வேறு விதமாக அமையும் என்பதை பெற்றோர் சிந்திக்க வேணண்டும்.
இத்தகைய இரவு வகுப்புக்களின் பின் மாணவர்கள் வீடு செல்லும் போது மாணவ குழுக்களிடையே வன்முறைக் கலாச்சாரம் எழ வாய்ப்பு உள்ளதாக பிரபல கல்வி நிலையம் ஒன்றின் நிர்வாகி எமக்கு தெரிவித்துள்ளார்.
இத்தகைய வகுப்புக்கள் மட்டக்களப்பில் இடம்பெற்ற இரட்டைக் கொலை போன்று இன்னொரு அசம்பாவிதத்தை வவுனியாவில் ஏற்படுத்தாதிருக்க வேண்டும் என எமது சமூக வலைத்தளம் வேண்டி நிற்கின்றது.
தயவுசெய்து மோட்டுத்தனமான சிந்தனையை பரப்பாததீர்கள்.சட்டவிரோத செயல்கள் நடப்பதற்கு தீர்வாக அனைத்துத்தரப்பினரதும் சுதந்திரத்தை பறிப்பது தீர்வல்ல. சட்டத்தை பாதுகாக்கும் பொலிசாரும் அவர்களை தட்டிக்கேட்கும் அதிகாரம் படைத்தவர்களும் ஏன் சமகாலத்திற்கேற்றவாறு சிந்திக்கவில்லை என்பது கவலையளிக்கின்றது. இலங்கையின் ஒரு பகுதியில் ஒரு காலத்தில் எந்த வயதினரும் எந்த நேரத்திலும் எங்கும் எவரது துணையுமின்றி சென்றுவரலாம் என்ற காலம் இருந்ததென்பதை மறக்கக்கூடாது.இதை நான் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் சட்டத்தை மதிக்கும் அல்லது மதிக்காதோரை மதிக்கச்செய்யும் நிலையினை ஏற்படுத்துவதன் மூலம் அனைவரும் நிரந்தரமாக நிம்மதியாக வாழ முடியும். தயவுசெய்து பழமைவாதிகளாக வாளும் நிலையை கைவிடுங்கள்.
ReplyDelete