Saturday, April 20, 2013

பொதுபல சேனா இரண்டாகப் பிளவுறுகிறது...! பாரியதொரு மாற்றம் மிகவிரைவிலேயே...

முக்கிய உறுப்பினர்கள் பலரிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையானது பூதாகரமாகி பொதுபல சேனா இயக்கத்தினுள்ளே பாரிய பூகம்பமொன்று வெடிக்கும்போல் இருக்கின்றது என செய்திகள் அடிபடுகின்றன.

இயக்கத்தினுள்ளே சிற்சில உட்பூசல்கள் இருப்பது உண்மையாயினும், அந்தப் பிரச்சினைகள் வெடித்து ஒருபோதும்பொதுபல சேனா அழிந்தொழியாது என பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் குறிப்பிடுகிறார்.

தகவல்களின்படி, ஒரு இளம் தேரருக்கும் அவர்களது ஊடக பேச்சாளர் ஒருவருக்கும் இடையேதான் இந்தப் பிரச்சினை கிளம்பியுள்ளது.

தனது திட்டம் ஏது என்பதை சரியாகப் புரிந்துகொள்ளவியலாத ஒருசிலரினாலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என அவ்வியக்கத்தின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிடுகிறார்.

இந்நாட்களில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானஸார தேரர், தாய்நாட்டுக்கு வருகை தந்த்தன் பின்னர் இதுபற்றி பரவலான முறையில் கலந்தாலோசித்து இதனை முடிவுக்குக் கொண்டுவரலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

(கேஎப்)

2 comments :

Unknown April 20, 2013 at 8:58 PM  

அல்லாஹ் போதுமானவன்.

Unknown April 21, 2013 at 11:42 AM  

budu bala sena ethil ullor thai thanthai ulaippil valeravillai. Thanpaduvan

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com